Saturday, June 22, 2013
Bridgewater-சேது தீர்த்தம்
சனிக்கிழமையாதலால், வழக்கம் போல் இன்று Sri Venkateswara Temple, Bridge water சென்றேன். இதற்க்கு (Bridgewater) நம்மவர்கள் வைத்திருக்கும் பெயர் - 'சேது தீர்த்தம்'. அப்படியே தமிழ்ப்படுத்தி 2-3 தமிழ் blogல் பார்த்தேன். நம்மவர்கள் எங்க போனாலும் தனித் தன்மையோடு தான் இருக்கிறார்கள். அப்படியே Hi-fi micகுடன் அர்ச்சகர் சத்ய நாராயாண பூஜை செய்து கொண்டிருந்தார். நடுவில் அதன் மகத்துவத்தை English-Telugu-Hindi என்று மாறி மாறி விளக்கிக் கொண்டிருந்தார். மற்றொருவர் Lord பாலாஜி பூஜையில் இருந்தார். இரண்டு நம்மாழ்வார் தமிழ்ப் பாசுரங்கள் சொல்லி, 'சடகோபன் தண்தமிழ் நூல் வாழ... கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ' என்ற போது என் மெய் சிலிர்த்தது. கடல் கடந்து வந்தாலும், இவை எல்லாம் நடத்தி , நம் தமிழையும் வளர்க்கிறார்கள்/ வாழ்த்துகிறார்கள். மன நிறைவோடு வெளியில் வந்தால் பௌர்ணமி நிலவு கண்ணுக்குக் குளிராக! அத பார்த்ததும் சற்றே 15-20 வருஷம் பின்னாடி போனேன். 'கிட்ட கோட்டை கட்டிருக்கு, எட்ட மழை பெய்யும்', இனிக்கு எட்ட கோட்டை கட்டிருக்கு, கிட்ட எங்கயோ மழை பெய்யறது' -- இப்படி எல்லாம் நிலாவைச் சுற்றி இருக்கும் வளையத்தைப் பற்றிப் பேசிய காலங்கள் கண் முன்னாடி வந்து சென்றது. இவை எல்லாம் உண்மையான்னு தெரியாது. 4-5 பேர் சேர்ந்து நிலாச் சோறு சாப்பிட்ட நினைவுகளுடன் வண்டியில் வீடு நோக்கிப் பயணித்தேன். எல்லாருக்கும் இது போன்ற சிறு வயது அனுபவம் இருக்கும். இனி வரும் Generationக்கு இவை எல்லாம் அனுபவிக்க முடியாத வரலாறு தான். இன்று கிட்ட கோட்டை கட்டி இருந்தது. எட்ட மழை பெய்யும் என்று நினைக்கிறேன்.:)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment