மன்னர் பெருமக்களான குலோத்துங்க சோழன். கருணாகர பாண்டியன் ஆகியோர் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கிறார்கள் சடையப்ப வள்ளல் முதலான முக்கியஸ்தர்களும் அங்கு இருக்கிறார்கள். அரசருடைய ஆணையின்படி, கம்பர் தான் எழுதிய ராமாயணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது,
தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனுமிது வழக்கே
உருண்ட வாய்தொறும் பொன்னுரு ளுனரத்துரைத் தோடி
இருண்ட கல்லையும் தந்நிற மாக்கின இரதம்
என்ற பாடலைச் சொல்லி, அதற்கு விளக்கமும் சொன்னார் கம்பர்.
பல நூல்களையும் கற்றுத் தெளிந்த பெரியோர், கல்லாத முழு மூடர்களைச் சேர்ந்தாலும், அந்த மூடர்களின் பேதைமை புத்தியை மாற்றி, தங்களைப் போலவே அறிவாளிகளாகச் செய்வார்கள். அதுபோல அறிவாளிகளாகச் செய்வார்கள். அதுபோல, கறுத்த கருங்கல் பாறைகளின்மேல் தேர்களின் தங்கச் சக்கரங்கள் உராய்ந்து ஓடி ஓடி, கருங்கல் பாறைகளும் தங்க நிறமாகி விட்டன! என்பதுதான் மேற்படி பாடலின் பொருள்.
இந்த விளக்கத்தைக் கேட்டதும், சபையிலிருந்த அனைவரும் கம்பரைப் பாராட்டினார்கள். பாராட்டு ஒலி அடங்கியது. சோழ மன்னர் கம்பரைப் பார்த்து, கம்பரே! நீங்கள் சொன்ன அந்த உத்தமமான தர்மம் உங்களிடம் அமைந்திருப்பதை நான் அறிவேன். என்றார்.
அதைக் கேட்ட மன்னர் கருணாகர பாண்டியன், அது என்ன? என்று ஆவலுடன் கேட்டார். அதற்கு அங்கிருந்த சடையப்ப வள்ளல், கம்பர் வாழ்க்கையில் நடந்த அந்த நிகழ்ச்சியைச் சொல்லத் தொடங்கினார்
***இந்தப் பாடல் சிறுவயதில் படித்தது. நேற்று கம்பனைப் பற்றி ஆராய்ந்த போது கிடைத்தது.. இந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்லும் கம்பனை நல்ல உரையாசிரியர் என்று கூட சொல்லலாம். கவிச்சக்கரவர்த்தி அல்லவா!***
மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறையே கூவிறையே
உங்களப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்கப் பெருமானே!
மேற்கண்ட பாடல் சோழ நாட்டில் ஒருவன் அரசரைப் புகழ நினைத்து, தெருவில் தன் காதில் விழுந்த வார்த்தைகளை வைத்து உருவாக்கியது.
இதற்க்கு கம்பர் சொன்ன விளக்கம் (என்னுடைய தமிழில்)
மண்ணையுண்ட திருமால் போல், மக்களைக் காப்பவனே!
சோலைகளுக்குத் தலைவனே! நிலவுலகுக்குத் தலைவனே!
இந்நாட்டை ஆண்ட சிங்கத்தின் புதல்வனே! (சிங்கக்குட்டி)
கொடையில் கர்ணனே (கன்னா); அவனை அடுத்த தர்மனே (பின்னா); மன்னவனே; தென்னவனே;
சோழநாட்டுக்குத் தலைவனே!
FYI : கன்னா - வில்லிபாரதத்திலும் கர்ணனை இவ்வாறே குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment