இன்று படித்ததில் மகிழ்ந்தது --
*மகாவித்வான் ரா. இராகவையங்காரின் கவிச்சக்ரவர்த்தி கம்பர்*
சங்க இலக்கியங்களிலும், வைணவப்பிரபந்தங்களிலும் இராமாயணக் கதைக் குறிப்புகள் உள்ளன. சில செய்திகள் வடமொழி நூல்களில் காணப்படாதவையாகும். தனுஷ்கோடிக்கரையில் இராமபிரான் யுத்த சம்பந்தமான ஆலோசனை நடத்துகையில், ஆலமரத்தில இருந்த பறவைகளின் ஒலியால் துன்பப்பட்டு, தன்கையமர்த்தி பறவைகளை ஒடுங்கி இருக்கச் செய்த சேதி வால்மீகியால் கூறப்படாதது கடுவன் மன்னனார் என்ற சங்கப் புலவர்,
வெள்வேல் கவுரியர் தொன்முதுகோடி
முழங்கிரும் பெளவம் இரங்கு முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்து அன்றால்" (அகநானூறு-70)
என்று பாடுவர்.
No comments:
Post a Comment