சேது அணை பற்றியக் குறிப்புகள் கம்பராமயணத்தில் மட்டுமல்லாது நிறைய இடங்களில் காணப்படுகின்றது. 'குரங்குகள் மலையை நூக்க..'(திருமாலை) , 'கலிதவர சேது பந்தம்' (அடிக்கடி உச்சரிக்கும் ஸ்வாதி திருநாள் மகாராஜா கீர்த்தனை) இன்னும் பல. ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம்**
**இப்பாடலில் அணையை ஆதிசேஷனுக்கு உருவகப்படுத்தி 'சென்றால் குடையாம்இருந்தால் சிங்காதனமாம்' என்கிற ஆழ்வார் பாடலை நினைவுப்படுத்துகிறார் கம்பர்.**
நாடுகின்றது என் வேறு ஒன்று? நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான்
‘ஓடும் என் முதுகிட்டு ‘என ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது சேதுவே. (சேது பந்தனப் படலம்)
சேதுப் பாலத்தின் அளவை இந்தப் பாடலால் அளக்கிறார் கம்பர். 100 யோஜனை (~800 miles) நீளம் , 10 யோஜனை (~80 miles) அகலம்.இந்த அணை 3 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டதாக கம்பர் -
'உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை,முற்ற மூன்று பகலிடை; முற்றவும்' என்று கூற,
வால்மீகியோ 5 நாட்களில் கட்டி முடித்ததாகக் கூறுகிறார்..
எய்தி ‘யோசனை ஈண்டு ஒரு நூறு உற
ஐ இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை ‘என்பது செப்பினார்
வைய நாதன் சரணம் வணங்கியே. (சேது பந்தனப் படலம்)
No comments:
Post a Comment