இந்தப்பாடல் - கம்பராமாயணம் 'வாலி வதை படலத்தில்' , வருந்திய அங்கதனை வாலி தேற்றுவது! (ஒரு சுவாரஸ்ய தகவலுடன்)
ஆயன பலவும் பன்னி,
அழுங்கினன் புழுங்கி, நோக்கித்
தீ உறு மெழுகின் சிந்தை
உருகினன்; செங்கண் வாலி,
‘நீ இனி அயர்வாய் அல்லை ‘
என்று, தன் நெஞ்சில் புல்லி,
‘நாயகன் இராமன் செய்த,
நல்வினைப் பயன், இது‘ என்றான்.
தீயிலிட்ட மெழுகு போல் புலம்பிய அங்கதனிடம் வாலி 'எல்லா உயிர்கட்கும் தலைவனான
இராமன் செய்ததான இச்செயல்,(நல்வினைப் பயன்) யான் முன் செய்த புண்ணியத்தின் பயனாகும்' என்றான். வாலி தன் தவற்றை உணர்ந்து, தண்டனையை ஏற்று சொன்ன வரிகள்
ஒரு ஒற்றுமை கண்டேன் - கம்பனுக்கு முற்ப்பட்ட நம்மாழ்வாரும் 'தீயோடு உடன் சேர் மெழுகாய்' என்று மெழுகை உவமையாக்கியிருக்கிறார்!:)
No comments:
Post a Comment