யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் - பாரதி
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. அண்மையில் படித்தது-உண்மைத் தன்மை தெரியாது.
"ஆங்கிலம் வணிகத்தின் மொழி
இலத்தீன் சட்டத்தின் மொழி.
கிரேக்கம் இசையின் மொழி
ஜெர்மன் தத்துவத்தின் மொழி
பிரஞ்சு தூதின் மொழி
இத்தாலி காதலின் மொழி"
என்னைப் பொறுத்தவரை தமிழுக்கு அப்படி வரையறை செய்ய முடியாது.வரையறுக்க முடியாத பண்புகளைப் போதிக்கும் மொழி.மொழியையும், அதை நன்கு கற்பவர்களையும் இழந்து வருகிறோம். மொழி சம்பந்தப்பட்ட அனுபவம்- கல்லூரிப் பருவத்தில்
நான் தியாகராஜர் பொறியியற்க் கல்லூரியில் ஒரு 6 வருஷம் படிச்சேன்.எனக்குத் தெரிந்தவரை எந்த பொறியியற்க் கல்லூரியிலும் தமிழ்க்கு தனி முக்கியத்துவம் இருக்காது. பிற மொழி மாணவர்கள் நிறைய படிக்கறதால அது சாத்தியாமும் இல்ல.வருசத்துக்கு தமிழை மையப்படுத்தி 3-4 பாடத் திட்டம் சாராப் பிறதுறைச் செயற்பாடுகள் மாதிரி வைக்கலாம். நாம கல்லூரிப் பாடமே அப்படித் தான் படிப்போம். சரி இருக்கட்டும். 2001 - நான் BSc Applied Sciences படிக்கும் போது A.P.J. அப்துல் கலாம் என் கல்லூரிக்கு உரையாற்ற வந்தார். அப்போது அவர் பிரதமரின் அறிவியல் ஆலோசகர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏதோ கருத்தரங்கு முடித்துவிட்டு வந்ததாக ஞாபகம். கல்லூரி திருவிழாக் கோலம் தான். ஆங்காங்கு தோரணம்-பதாகை எல்லாம். 1 வாரத்துக்கு முன்னாடியே பசங்க எல்லாருக்கும் ஒரு வாய்மொழி ஆணை.அவர் கிட்ட என்ன என்ன கேள்வி கேட்கணும்ன்னு ஒரு பட்டியல் தயார் செய்யும்படி. யாரும் கேட்கலாம். அதில் ஒரு கட்டுப்பாடும் இல்ல. எனக்கு அந்தயளவுக்கு கேட்கற மாதிரி எந்த கேள்வியும் இல்ல. நானும், நண்பர் அன்பழகனும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினோம். ஏறத்தாழ அனைவரும் வாங்கியிருப்பார்கள். 2 நாள் கழித்துத் தான் அது என் கை சேர்ந்தது. அத்தனை குவிந்திருந்தன. நிகழ்ச்சிக்கு வரேன்.
வரவேற்புரை முடிந்ததும் அவர் பேசவந்தார். 'நண்பர்களே உங்கள் எல்லாருக்கும் என் வணக்கம்' என்று தமிழில் கூறியதும் அரங்கத்தில் சலசலப்பு-நிற்காத கைதட்டல்கள்; இவர் தமிழில் பேசுகிறாரே என்று! அனைவரின் நிலை கண்டு வியந்தேன்.தமிழகத்தில் பிறந்து, தமிழில் கற்று, தமிழில் இரு வார்த்தைகள் பேசியதால் தான் இந்த வியப்பு;ஒருபுறம் கவலையுற்றேன்! நான் எப்படிப்பட்ட சமுதாயத்தில் இருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன். கிட்டதட்ட 60-70% தமிழ் அறிந்த மாணவர்கள் தான்.இதே போன்றது நண்பரின் கல்லூரியிலும் நடந்ததாகக் கூறக் கேட்டேன்.
No comments:
Post a Comment