'விஷ்ணு சித்தன் கோதை' என்று தன்னை அறிவித்துக் கொண்டும், 'பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த', 'அஞ்சு குடிக்கொரு சந்ததியாய்' என்றும் மணவாள மாமுனிகளால் கொண்டாடப்படும் கோதைக்கு 'ஒரு கோதா (போராட்டம்)'.. மனசு கொஞ்சமல்ல நிறையவே கஷ்டமாய் இருக்கிறது. இது பற்றி எழுத. இதுநாள் வரை அவர் புகழையே எழுதிய இந்த கைகள், அந்த புகழுக்கு ஒரு அவச்சொல் வருவதை எதிர்த்து எழுதுவதை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. பாவை நோன்பு என்பதனை தமிழுக்கு அறிமுகம் செய்வித்தவர் 'ஆண்டாள்'. முப்பது பாடல்களும் ரத்தினங்கள், ஒவ்வொருமுறை படிக்கும் போதும் ஒரு நல்ல, புதிய அர்த்தம் தரும். பக்தியா, உபாயமா , வாழ்க்கை தத்துவமா, அறிவியலா, எல்லாவற்றிக்கும் மேலாக செந்தமிழா எல்லாம் உள்ளடக்கியதே திருப்பாவை..
தமிழின் சிறப்பே அதன் ழகரம் தான். அதை அருமையாய் இலக்கணம் மாறாமல், பதினோரு இடங்களில் பொருத்தி ஒரு பாவை பாடலை இதுவரை யாரும் பாடியதில்லை. பெரியாழ்வார் ஒன்பது இடங்களில் ழகரத்தை கையாண்டு ஒரு பாடல் அமைத்தார். இதைவிடவா அவரின் தமிழுக்கு ஒரு சான்று வேண்டும். சிங்கம் கர்ஜிக்கும் என்று தெரியும், ஆனால் அந்த 'கர்ஜனை' வடமொழி.. அதை தமிழ்ப்படுத்திய ஆண்டாள் 'மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு' என்று முழக்கம் செய்கிறார். எந்த சங்க கால புலவரும் சொல்லாத படி தமிழ் மாதங்களை அடுக்கிறார் தமிழ் மீது கொண்ட பக்தியால் தன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி இரண்டிலும் - மார்கழித் திங்கள், தையொரு திங்கள், மாசி முன்னால், பங்குனி நாள்.. என்னைப்பொருத்தவரை பக்தி இலக்கியத்தை அகப் பாடல்களோடு ஒப்பீடு செய்வது தவறு. அந்த ஒப்பீட்டில் வந்த வினை தான் இந்த 'மார்கழி புரட்சி'.. ஆம்!.. இதுவும் ஆண்டாள் சொல்லிச் சென்றது தான்.. அவர் பாவை நோன்பு தொடங்க இவ்வாறு அழைக்கிறார் 'வையத்து வாழ்வீர்காள்' என்று.. அதாவது தன்னோடு இருப்பவர்களை.. (பெரியாழ்வாரோ 'வாழாள்பட்டு நின்னீர் உள்ளீரேல்' என்று அழைப்பது வேறு).. அவ்வாறு நோன்பு நோற்க ஆண்டாள் அழைத்ததால், சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது இந்த 'மார்கழி புரட்சி'
இப்போதெல்லாம் மார்கழி புரட்சியாய் தான் போகிறது.. சென்ற வருஷம் நம்ப ஜல்லிக்கட்டு பிரச்சனைக்குப் போனோம். அதை விட முக்கியம் இந்த புரட்சி.. தமிழை இகழ்ந்தவரை கண்டு வெகுண்டெழாமல் இருந்தால் அவர்களையும் 'இந்த வையம் சுமப்பதும் வம்பு' தான். நேற்று ஒரு கூட்டம் என்று வாட்சப் வந்தது.. முதலில் அது உண்மையா, இல்ல வழக்கம் போல இந்த வாட்சப் வெறியர்கள் வேலையானு தெரியல.. அப்பறம் என் ஹவுஸ் ஓனர் வந்து நீ வரையா? என்று கேட்ட போது தான் இது நமக்கானது என்று முடிவானது.. நான்கு மணிக்கு கூட்டம்.. சரி ஏதோ கொஞ்சப்பேர் இருப்பார்கள்ன்னு நினைத்துப் போனேன். அங்கு வண்டி நிறுத்த கெடுபிடி இருக்கலாம்ன்னு நினைத்து போன tஎனக்கு, வந்திருந்த வண்டிகளின் கணக்குப் பார்க்க கொஞ்ச நேரம் பிடித்தது. கூட்டம் என்று சொன்னால் தவறு, இப்போதைக்கு 'பெரும் கூட்டம்' என்று விழிக்கலாம்.. இது 'பெறும்' கூட்டம் அல்ல, 'பெற்று' வந்த கூட்டமும் அல்ல..கைங்கர்யமே 'யாம் பெறும் சன்மானம்' என்று வந்த பாகவதர்கள் கூட்டம்.. வேன்களில் பலர் வந்திருந்தார்கள், விசாரித்ததில்அவர்கள் சொந்த காசில் வந்தவர்கள்.. மேடையும் நிரம்பி வழிந்தது. ஒரு கட்டத்தில் 'கொஞ்சம் மேடையை கிளியர் பண்ணி தாங்க' என்று மைக்கில் சொல்லப்பட்டது. இஸ்கான் அமைப்பினர் பஜனை நடந்தது முதலில்.. அதற்க்கு மிகப்பெரிய வரவேற்பு/ஆரவாரம். பின் அனந்த பத்மநாபசாரியார் 'அஞ்சு குடிக்கொரு சந்ததி' பாடலைச் சொல்ல நிறையவே கண் கலங்கினேன்.. கூட்டத்தின் துவக்கம் அது தான்.. அப்பறம் பூராமும் மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்ட, சார்ங்கம் முதைத்த சர மழையாய் பொழிந்தனர் மேடையில் இருந்தோர்.. வானில் ஒரு கருடன், தாழ இறங்கி பலமுறை வட்டமிட்டது. பெரியாழ்வார் வந்தார் என்று நினைத்தேன், நிறைய வருத்தமாய் இருந்தது அவர் இடத்தில் இருந்து பார்த்தால், அவர் பெற்றெடுத்த பெண் தானே ஆண்டாள் நாச்சியார்.. பஞ்ச்-நச் டயலொக் எல்லாம் நிறைய இருந்தது.. சிறிது நேரத்தில் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.. சுமார் பத்தாயிரம் - பண்ணிரெண்டாயிரம் மக்கள் வரை வந்திருக்கலாம் என்பது என் அனுமானம்..
திரு.விசு, திரு.எஸ்.வி.சேகர்,திரு.RSS வேதாந்தம், திரு.VHP நாகராஜ் அவர்கள் எல்லாம் வந்திருந்து முழங்கினார்கள். விசு அவர்கள் எந்த மேடையிலும் வந்து பேச தயார் என்கிறார் வைரத்தின் இரண்டு பாடல் வரிகளையே அவருக்கு பதிலாய் தந்து. 'ரோட்டுல பண்ணி போன நம்ப விலகிப் போனால் , 'நமக்கு பயந்து போகிறான்' என்று அது நினைத்தால், அதன் தவறு'.. சொன்னது எஸ்.வி.சேகர் அவர்கள்.. VHP நாகராஜ் அவர்கள் தாமரைக்கனி செய்த ஒரு வேலைய நேரத்தில் பார்த்ததாய் சொன்னார்.. இராம கோபாலன் அவர்கள் கண்ணீர் குரலோடு பேசினார்.. 'சும்மா பீச் பக்கம் வந்தேன்.. ஒரு அம்பது பேரு இருப்பாங்கன்னு நினைச்சேன்.. இங்க பார்த்தா நம்ப முடியல.. முன்ன நாங்க போராட்டம் பண்ண கூப்பிட்டா ஒருத்தரும் வர மாட்டா.'.அதற்க்கு மேல அவரால் பேச முடியவில்லை. (மேடையிலேயே அம்பது என்று APN, MAV அவர்கள்சொன்னது ஹாஸ்யம்).
திராவிட கட்சிகளையும் , திருப்பதி உண்டியல் பற்றிய சமீபத்திய பேச்சையும் அனைவரும் ஒரு பிடி பிடித்தார்கள்.. மணியன் அவர்கள் வந்திருந்தார். வழக்கம் போல் அவர் பேச்சு ஈட்டியாய் பயந்தது.. இது ஹிந்து ஒற்றுமை, இதற்குத்தான் நாங்கள் உழைந்தோம்.. இராமானுசர் 'திருகுலத்தார்' நியமித்தது என்று பலவற்றைச் சொன்னார்.. நடுவில் சிறுது நேரம் மின்சாரம் தடை பட, மெரினா புரட்சியை நினைவுபடுத்தியது அனைவரின் மொபைல் வெளிச்சம்.. ஆம் இது மார்கழி புரட்சி தான்..! 'தங்கத்திற்கு ஓசை இருக்காது, வெண்கலத்திற்கு ஓசை அதிகம் ஆனாலும்தங்கத்தின் தரம் குறையாது' என்று சிலேடை சொன்னது தேசமங்கையர்க்கரசி.
அனந்த பத்மநாபசாரியார் ஸ்வாமி என் கைகளில் உரசியபடி சில நிமிடங்கள் நின்றிருந்தார் எந்த பந்தா இல்லாமல்.. அதற்குள் இருவர் வந்து 'சுவாமி ஒரு செல்பி' என்றனர்.. இங்கேவந்துமா? என நினைத்தேன்.. 'சரி , போட்டோவே எடுத்துக்கோங்க' என்றார்.. என்ன பேச்சு வல்லமை, வீச்சு.. திராவிட இயக்கங்களே பயந்து ஓடும் அர்த்தமுள்ள அடக்கு மொழி வசனங்கள், நேரத்திற்கு ஏற்றாப்போல். கூட்டத்தை தொய்வில்லாமல் நடத்திப் போந்தார். இருள் நெருங்கும் நேரத்தில் இவர் அடித்த பஞ்ச் 'சூரியன் மறையத் துவங்கி விட்டது,.ஆனால் இங்கு ஒளிவரத்துவங்கிவிட்டது..'..ஸ்வாமி நீங்க உபன்யாசத்தை செகண்டரியாக வச்சுக்கோங்க..உங்களைப் போல் மேடைகளில் முழங்கும் உரத்த குரல் வேண்டும்.. !
ஸ்ரீ எம்.ஏ. வேங்கட கிருஷ்ணன், அன்று காலையில் தந்தி டிவியில் வந்த அந்த ஆய்வு கட்டுரை ஆசிரியரின் பேட்டி பற்றி விரிவாய்ச் சொன்னார். 'புரட்சி தலைவி அம்மா இருந்தா இப்படி நடந்திருக்குமா?' என்று உரக்க சொன்னது ஸ்ரீ. அரவிந்தலோச்சனன் அவர்கள்.. நான் கொஞ்சமும் இதை அவர் சொல்லுவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்ரீ கோபால வில்லி தாசர் அனைவரையும் கொஞ்சம் அழ வைத்தார், இதை இத்தோடு முடித்து விடலாமென்று. இன்னும் பல நடந்தது.. அனைவருக்கும் நன்றி.. ஆனால் இது இத்தோடு நிற்காமல், இது ஒற்றுமையாய்ப் போக வேண்டும்..
"ஜெய் ஸ்ரீராம்; பாரத் மாதா கீ ஜெய்; லோக மாதா கோதா தேவி கீ ஜெய்" என்ற கோஷங்கள் விண்னைப் பிளந்தன..நல்ல வாசகத்தோடு பதாகைகள், எல்லோருக்கும் ஒரு ஆண்டாள் படம், தண்ணீர் பாட்டில், முடிக்கும் முன் தொன்னையில் சர்க்கரைப் பொங்கல் என்று ஒரு மாற்றம் தெரிந்தது பிரியாணி கொடுத்து கூட்டி வரும் கூட்டத்திற்கு மத்தியில்.. திரு. நாகை முகுந்தன் ஒருவர் தான் ஆண்டாள் தமிழ் பற்றி முன்னர் சொன்ன "கர்ஜித்தல் = முழக்கம்" பற்றி சொன்னார்.. இது போன்றவற்றை அதிகம் பரப்ப வேண்டும்.. நாச்சியாருக்கான 'ஆன்மீக அரசியல்' இது தானா..?
'மற்றைய ஆதினங்களும் வரணும் சார்.. அப்பதான் நம் ஒற்றுமை தெரியும்' பக்கத்தில் இருந்த ஒரு சாமானியர் சொன்னார்.. முற்றியும் உண்மை.. இது தமிழுக்கான போராட்டம், சங்கத்தமிழுக்கானது.!.. 'கூடி இருந்து குளிர' ப்ராத்திப்போம்.. !
-- கிரி பிரசாத்
No comments:
Post a Comment