***அது நாள் வரை நல்லவளாக இருந்து, மந்தரையின் சூழ்ச்சியால் இராமனைக் காடு புகப் பணித்தாள் கைகேயி. ஆயினும் நல் அரசனாய் வருவதற்குத் தவம் மேற்கொண்டு, புண்ணியத் துறைகள் நீராடி 14 ஆண்டுகள் கழித்து வா என்றும். 14 ஆண்டுகள் என்பதை ஏழு-இரண்டு ஆண்டுகள் என்று சுருக்கிக் கூறியும் , 'வா' என்றும் இராமன் மீதுள்ள அன்பினால் மட்டுமே கூறியதாக நான் பார்க்கிறேன். மேலும் ‘இயம்பினன்அரசன்’ என்பதால் அரசு ஆணை இது மீறுதற்கு அரிது என்பதைச் சுட்டினாள். 'பரதனே' என்பதில் அவளின் புத்திர பாசம் மேலோங்குகிறது***
‘ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித்,
தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப்,
புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா ‘என்று
இயம்பினன் அரசன்‘‘ என்றாள். (அயோத்தியா காண்டம்-கைகேயி சூழ்வினைப் படலம்)
No comments:
Post a Comment