வருஷத்திற்கு ஒரு முறை நடக்கும் திருவிழா. சுமார் நான்கு இலட்சம் மக்கள் அந்த 5 நாட்களில் கூடுவார்கள். அதே அழகர், அதே வாகனம். ஆனா, நம்ப மதுர சனம் எந்த சில்லாவுல இருந்தாலும் ஓடி வருவோம்ல. மூணு மாசத்துக்கு முன்ன டிக்கெட் போட்டு, ஆபிசில முன்னாடியே லீவு சொல்லி காத்துக்கிடப்போம் அந்த ஒருநாளைக்கு. சமயத்துல லீவு கிடைக்காது, டிக்கெட் இருக்காது. வீட்டுலேர்ந்து வேலை பார்க்கும் வழியும் இருக்காது. ஆனாலும் கடைசி நிமிஷம் வரை போகணும்ன்னு ட்ரை பண்ணுவோம். யார் வந்தாலும் வரலேன்னாலும் அவரு மட்டும் ஜம்ம்ன்னு வந்திருவாரு.. சீயான் தோள்களில் பேரக் குழந்தை மொட்டையோடு, தோல் பையில் தண்ணீரோடு துருத்தி பீச்சுவார், கோமாளிகள், சவ்வு மிட்டாய்காரர், பீப்பி காத்தாடி, பொருட்காட்சி, பெரிய விசிறியோடு தாத்தா, நீர்மோர், சொம்புகளில் நாட்டு சர்க்கரையில் எரியும் கற்பூரம், பச்சைக் கொடி இன்னும் எத்தனை. அந்த ஒரு நிமிஷம், ஒத்த கிளியோட அவரு குதிரையில் வர, ’இந்த வருஷம் என்ன பட்டு?’, ‘அட பச்சை தான்’ என்று சொல்லும்போதே ‘கோயிந்தா...’ அம்முட்டுதான்னப்பு எங்க பக்தி. மிச்சதெல்லாம் அவனே பாத்துப்பான். இந்தவாட்டி (2020) ஏதோ வியாதிக்கு பயந்து சனமே ஊர்ல தான் இருக்கோம், அந்த சாமி மட்டும் வரல.
முப்பது வருடத்திற்கு முன் கொள்ளுப் பாட்டி என் கையைப் பிடித்துக்கொண்டு போய் கள்ளழகர் எதிர் சேவை சேவிக்க வைத்ததும், சில வருடம் முன் என் பாட்டி கையை நான் பிடித்துக்கொண்டு மதுரை வீதிகளில் அதே விழாவில் நடந்ததும் நினைவில் வந்து போனது. தலைமுறைகள் கடந்த பாரம்பரியம் நிறைந்த திருவிழா. மதுரையின் வாழ்வோடும், மக்களோடும் கலந்து ஓடுகிறது இந்த திருவிழா. ஒரே நாளில் அழகர் கோவிலில் அனைத்து அலங்காரங்களும் நடந்து, நேரலையில் பார்க்க முடிந்தது. 'பார்க்க முடிந்தது' மட்டுமே ஒரு ஆறுதல். ஆனால் இது வாட்ஸாப்ல் வரும் வீடியோ போல் தான். அந்த அனுபவம் தனி மேலே சொன்னது போல.
இதை மையமாய் வைத்து, இலக்கியங்களில் வருவது போல் (பெரும்பாலும் குறுந்தொகை) ஒரு விருத்தம் எழுதலாம் என்று எண்ணி, முதன்முதலாய் (இலக்கியமாய்) 11 பாடல்கள் எழுத முடிந்தது. பாடல்கள் ஐந்து சீர் கொண்ட கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். கொஞ்சம் தளைகள் தட்டலாம். அவற்றை சரிசெய்ய கொஞ்சம் நேரம் வேண்டும். முயற்சிக்கிறேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதுரைக்கு அழகர் வராமல் கண்டு, தலைவி வருந்தி, தோழியை தலைவி தூதுவிடுகிறாள்.
பாடல்களுக்கு சிறு முன்னுரை பொருள்
நால் தடந்தோள் காயா வண்ணம் காணா*
தால் தடுக்க கைவளை கழன்றோடச் சென்று*
பால் அன்ன மேனியும் பசலையுற்று நலிவெய்த*
மால் கண்டு சொல்லாய்வாகை வடம்சூடும் தோழி!* (1)
பா-1 : தலைவி மதுரையில் இருக்கிறார். அழகரைக் காணாது, அவர் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார். அவளின் நாக்கு குழறுகிறது. அவளின் பால் போன்ற நிறமும் பசலை நோய் கண்டு நிறமே மாறியது. இவற்றை வெற்றி மாலை சூடும் தோழி மூலம் தூதுவிடுகிறார்.
சுந்தர பாண்டிய பட்டிணம் நல்முனி அடியாரில்நிரம்ப*
சுந்தர குழற்க்கட்டொடு கள்ளர் தலைக்கச்சு எதிர்நோக்க*
சுந்தர தோழி நின் சொல்லின் வலி கொண்டு*
சுந்தர தோளுடையான் அடி சேர்ந்து சொல்லாயோ?** (2)
நாடி வந்த களிற்றிக்கு சுழற்றிய தன்ன*
தேடி வந்த வினைதீர செயிவளரி சுழற்றி*
பாடியாடி வந்து நிற்க்கும் பெருங்குழுவு பற்ற*
ஓடிச் சென்று கள்வன்செவி சொல்லாய் தோழி** (3)
பா-2,3;
மக்கள் அனைவரும் எதிர்சேவை காண காத்திருக்க, அழகர் மலையிலிருந்து வராமல் கண்டு, இப்போது வந்திருக்கும் வினையைக் களைய தன் கையில் பிடித்து வரும் ‘வளரியைச்’ சுழற்றுமாறு, அழகரை அழைத்துவர எஞ்ஞான்றும் வாகை மாலை தரிக்கும் தோழியை தலைவி தூது அனுப்புகிறார்.
சங்கப் பாமாலை சாற்றும் வண்புதுவை கோதைதன்*
திங்கள் நாயகன் அடை கோலக்கிளி தன்னோடு*
அங்கயல் கண்ணி கிள்ளை தஞ்சமென பற்றநீ*
பாங்காய் தல்லாகுளம் தங்குநாளென்று சொல்லாயோ தோழி!* (4)
பரியேறி பசுந்துகில் சாற்றும் பரமன் அன்று*
அரியாய் தூண்பிளந் தருள் செய்த கோலம்*
தெரிந்தே செப்பினேன் இன்றிவர் வரும் காலமென்று*
பரிந்தோடி உள்ளாரும் சொல்லாயோ தோழி!* (5)
பா - 4,5
4. கள்ளழகர் என்கிற தலைவன் வராமல் இருக்க தோழியை தூதுவிடுகிறார் தலைவி. இது நடப்பது எதிர் சேவையின் பிறகு. பெருமாள் தல்லாகுளம் கோவில் வரவேண்டிய நேரம். ஆண்டாள் மாலையும் கிளியும் வந்தது. அந்தக்கிளியோடு மீனாட்சி கிளியும் தோழமை கொண்டு காத்திருக்கிறது.
5. அழகர் குதிரை வாகனம் ஏறும் நேரமும் வந்தது, பச்சைப் பட்டோடு. அப்போதும் வராமல் இருக்கக்கண்டு, நரசிம்மர் போல் விரைந்து வர கேட்கிறார் தோழி வழியாக உள்ளாரும் சொல்லாய் என்று,.இம்முறையும் அதே தோழி தான்.
வைகல் வருமுன் இக்கரை சேரும் அக்கறைகொண்ட*
வைகுந்தன் இன்று வருவானோ?வென புல்லாணி போகா*
வைகையும் துயில்மறந்த நகர்தனில் நின்றதென*
வையம் அளந்த மாயனிடம் சொல்லாய் தோழி!* (6)
ஆயர் வெண்ணை கொண்ட திருவதரம் தும்பி
சாய்க்கவீழ் மாந்தேன் சேர் சிலம்பாறு தீர்த்தம்*
மாயர் நாளும் சுவைத்து மாமதுரை வந்தாரென*
தாயர் விளித்து நட்டபாடை பாடாய் தோழி!* (7)
பா - 6,7 - அழகர் வராதது கண்டு வருந்தியும், அழகர் வந்ததாய் மகிழ்ந்தும் தலைவி உரைப்பது
6. திருமாலிருஞ்சோலை அழகர் விவேகவதி என்ற வைகைக்கு வரவில்லை என்று வைகையே கடலை நோக்கிச் செல்லாது உறங்காநகரான மதுரையில் தங்கியதாய் வைகையின் வருத்தம் பற்றி தலைவி தோழி மூலம் செய்தி அனுப்புகிறார். கடலைச் சேராத ஒரே நதி வைகை தான். இன்றும் அது இராமநாதபுரம் கண்மாய் தான் சேர்க்கிறது. ஆனாலும் அதை ஏறிட்டு தலைவி கூறுகிறார்.
7. அழகர்மலையில் யானை ஒன்று மாமரத்தைச் சாய்க்க,அதன் பூவிலிருந்து தேன் சிலம்பாற்றின் நீரில் கலக்க,அதை ஆயர் கையால் வெண்ணையுண்ட அழகர் தினமும் பருகுகிறார்.அதைவிடுத்து அவர் மதுரை வந்துவிட்டார் என்று தன் தாயாரிடம் தெரிவிக்கும் படி தோழியிடம் சொல்கிறார். தோழி இன்குரலில் நன்கு பாடக்கூடியவர்.அவரை, ‘நட்டபாடை’ என்ற தமிழ்பண்ணில் பாடச் சொல்கிறார் தலைவி.

செஞ்சொல் கூட்டி கோதை தூதுசெய் வேங்கடம்சேரா
மஞ்சும் * மலையென மயங்கி மாலிருஞ்சோலை மாரியாக்கியந் *
அஞ்சன முகில்கொண்டு எம்தழலு மாற்றுமழகன் வரவுகாண *
நஞ்சு முண்டாந்தானும் நிற்கும்நிலை சொல்லாயோ தோழி!* (8)
காரைக் கிணறு கழித்து கள்ளவேடம் தான்நோக்கி*
நாரை கதிமோட்சம் நல்க நான்மாடக்கூடல் நாடும்நின்*
தாரை பாதம்தாங்குவார் நின்வாய்ச் சொன்னவகை படிசேர்*
வாரையொடு ஆண்டார்கோட்டம் கூடினவகை சொல்லாய் தோழி!* (9)
பா -8,9 - மதுரையின் தற்போதைய நிலையும், அழகர் கோவிலிலுள்ள நிலையும் அதே தோழி வழியே தூதுவிடுகிறார்
8. ஆண்டாள் மேகத்தை திருமலைக்குத் தூதுவிட, அதுவோ இது தான் திருமலை என்று அழகர் அழகில் மயங்கி இந்தமலையில் மழை பொழிந்தது. அந்த மழை மேகத்தோடு வந்து தலைவியின் உள்ளத் தணலையும், மக்களுக்கு குளிர்ச்சியும் அளிக்க வருவதைக் காண ஆலவாய் அழகனும் காத்திருப்பதாய் தலைவி சொல்கிறார்.
9. முன்காலத்தில் காரைக்கிணறு என்ற இடம் கடந்தபின் தான் கள்ளர் வேடம் பூணுவார் அழகர். அதற்க்கு அழகரை அழைத்துவர திருப்பாதம் தங்குவார் பலரும், கீதையில் சொன்ன அத்யாய கணக்கில் (18) இருக்கும் படிகளுக்கு அருகிலிருக்கும் (திருமலை)ஆண்டார் மண்டபத்தில் பல்லக்கு வாரையோடு காத்திருப்பதாக தலைவி செய்தி சொல்கிறார் தோழி மூலம். மதுரையில் நாரைக்கு மோட்சம் கொடுப்பதும் உண்டு. அது போல் தனக்கும் கேட்கிறார்
அர்த்தம் அறிவர் பின்னானாள் வாய்நேர்ந்த* குறை
தீர்த்த பாங்கில், ஓன்றுநூறாயிரமாய் நிறைந்த அடிசிலொடு
தீர்த்தம் கொணர்ந்து நாட்டார் மஞ்சனமாட்டி கூத்தாட
பார்த்தன் பாகனாய் பரியேறிவர பாடாய் எழில்தோழி! (10)
தண்தரும் எதிர்சேவை தந்து முனிசாபம் நீக்க
வண்டியூர்தனில் அரவும் புள்ளும் ஏறி* ஓரிரவில்
விண்ணோர் வியக்க ஒன்பதோடு ஓருரு* காட்டுநாளில்
பண்பாடும் அடியாரொடு கலக்க, இல்லையினி பிறப்பே (11)
பா-10,11 - கடைசி இரண்டு பாடல்கள். தோழியை மீண்டும் பாடச் சொல்கிறார் தலைவி.
10-ஆண்டாள் வாய் நேர்ந்ததை பின்னாளில் இராமானுஜர் நிறைவேற்றியதால், கோதை சொன்னது போல் இன்றும் வைகைக் கரையில் பல மண்டகப்படிகளில் ஒன்று நூறாயிரமாய் அக்கார அடிசில் செய்கின்றனர். நாட்டார் எல்லாம் தண்ணீரை அழகன் மீதும் பீச்சுகின்றனர் உரிமையோடு. இதைச் சொல்லி பார்த்தசாரதியை அழைக்கிறார் எழில் தோழி மூலம். (அர்த்தம் அறிவர் - பாஷ்யக்காரர்)
11-மண்டூக முனி சாபம் நீங்க, கருட, ஆதிசேஷன் வாகனத்தில் வந்து, ஒரே இரவில் ஒன்பது அவதாரமும், தனியாய் மோஹன அவதாரமும் காட்டும் இந்தத் திருநாளைத் தொண்டர்களோடு சேர்ந்து காண்பவர்களுக்கு இல்லை மறு பிறப்பே என்று முடிக்கிறார் தலைவி.

No comments:
Post a Comment