"புளி புளிப்பாக இருந்தாலும் பாத்திரம் துலக்க உபயோகமாகிறது. ஆனால் வேறு கசப்போ, இனிப்போ, உப்போ பாத்திரத்தைத் துலக்க உபயோகப்படுவதில்லை. அதுபோல் புராணங்களிலுள்ள ஸம்பவங்கள் தற்போது நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மையான் ஆத்மசுத்தியைத் தருகிறது. மற்ற சுவைகளை சுத்தம் செய்வதற்கு உதவாததுபோல் வேறு உலகப் புத்தகங்கள் ஆத்மசுத்தியைத் தராது." --அண்ணா
ஸ்ரீ கிருஷ்ணா ப்ரேமி அண்ணாவின் 83 நாள் தொடர் 'மஹா பாரத' உபன்யாசம் இன்றோடு முடிந்தது. வியக்கத்தக்க உபன்யாசம். சனாதன தர்மம், இராஜ தர்மம், ரிஷி தர்மம், பிராமண தர்மம், ஷத்ரிய தர்மம், பாரதத்தின் சிறப்பு-தர்மம், கிருஷ்ண லீலை ., வேதம், உபநிஷத் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்கள். ஆஹா. அவருக்கு இணை அவர் தான்!
பரிஷித் பட்டாபிஷேகத்தோடு முடித்தார். திருவல்லிக்கேணி பாசுரம், அதன் விளக்கம் அருமை. துவாரகையில் மறைந்த கண்ணன், திருவல்லிக்கேணியில் தோன்றினார். பாபு இராஜேந்திர பிரசாத் திருவல்லிக்கேணி கோவில் வீதியில் காரில் செல்ல மறுத்து நடந்து சென்றதாகவும், காரணம் கேட்டதற்கு 'நான் இந்தியாவிற்கு இராஜாவாக இருந்தாலும், உலகத்திற்கு இராஜா கிருஷ்ணன் தான். அவர் முன்னாடி காரில் அமர்ந்து 'ஜம்முனு' போகக்கூடாது. அவர்வந்து ஓட்டினா நான் உக்கார்ந்து போறேன்' என்று நகைச்சுவையோடு சொன்னாலும் நடந்தே சென்றாராம். (இன்றைய நிலை சற்றே கண் முன்னாடி வந்து போனது:(). விவேகானந்தர் , பார்த்தாவுக்கு எழுதிய கடிதமும் இன்றைய உபன்யாசத்தில்!. இவை எல்லாம் 'குவலையத்தோர் தொழுதேத்தும்' வரிகளுக்கு! தினமும் அசத்தாலான நேரடி ஒளிபரப்பு (Live Streaming).
நடுநடுவே விசாகா ஹரி காலக்ஷேபம். A Grade Singer என்ன; A+++ கூடச் சொல்லலாம். அண்ணன்வின் சாயல் அப்படியே உபன்யாசத்தில்.
கண்டிப்பாக நாளையும் 9:30 AM EST க்கு srisrianna.com link click செய்து காத்திருப்பேன். அத்யயன உத்சவம் முடிந்தாலும் 21ம் நாள் காலையிலேயே கோவிலுக்குப் போறமாதிரி.:)
No comments:
Post a Comment