Thursday, February 21, 2013

Thirali - திரளி - அபிமான ஸ்தலம்

I have copied this from wiki about my native. I will post a short writing in Tamil soon here.

Author- Thirali R.Srinivasa Raghavan, Chennai

Situated in a serene and tranquil setting amidst the lush green paddy fields ( During cultivation) with the backdrop of a cluster of Varshanad hills at the distant west is Sri Srinivasa Perumal Temple at THIRALI Village 5 Km South west of THIRUMANGALAM in Madurai Dist and 2KM west of the Madurai-Tenkasi highways, with frequent bus facilities.Though not included in 108 VaishaviteDivya Desas its proximities to nearby Divya Desas, Viz., Thirukoodal (Madurai), Thirumalirunjolai, Thirumoghur, Thiruvilliputhur and Thiruthangal gained fame among the Vaishavites of southern districts of Tamilnadu for more than 4 centuries.
The name of the village “THIRALI” might be a metamorphosis of “THIRAL+EE” i.e, honey bees hovering in multitudes around the flora that existed around the temple or “BHAKTHAR THIRAL ”depicting“ crowd of Devotees or “THIRU ARULEE” meaning wealth giving Village. The majority of the inhabitants were Sri Vaishnavite Brahmins, basically hard working agriculturists with small holdings of wet and dry lands, amongst whom some were renowned cooks, some were erudite scholars in Prabandham and Vedic scriptures looking after temple rituals and a few Siddha doctors and Hata yogis too.
Due to successive spells of drought, agriculture failed and the Brahmin folks out of penury gradually left for greener pastures or to stay, in their twilight years, with their employed children in towns for the past 5 decades. Only 5 or 6 inhabitants out of 120 in 2 Agraharams remain now who too are counting their days of exit. This has affected the daily Puja and maintenance of the Temple for some years. However, with the efforts of benevolent devotees, the Pujas of the temple culminated in the construction of Mandapam linking the main shrine with the shrines for Garuda, Sri Rama and Manavala mamunigal. The foundation for a well-laid path on the Praakharam and 4 tiered Rajagopuram was laid by Thirupathi Chinna Jeer during 2003. The Samprokshanam of the Rajagopuram was consecrated by Thirupathi Peria Jeer during Feb 2004. Such is the great concern and graceful attitude of THIRUPATHI Pontiffsto this small but famed temple though the village with a hory past now lamentably wears a deserted look.
THIRALI was in the past certainly in the itinerary of Yatras of the Pontiffs of Ahobila mutt, Vanamamalai mutt and Kandadai Annan mutt, without any bias f “KALAI” or very few of their disciples residing or even none at all and the local vaishnavites honoured the pontiffs fittingly during their limited stay and got their blessings.


Every year the Brahmotsvam (Sravanam) of Lord Srinivasa like in Tirumala is being conducted now but on the last 5 days only.Scholars in Divya Prabandham and Vedic Pandits drawn from Madurai, Thirumoghur, Srivilliputtur, Srirangam and certain Divya Desas in Tirunelveli Dist participate and conduct the rituals.During the Utsav, the Temple of Serenity suddenly wears a look of exciting festivity. “Dravida Vedam” and Vedic mantras soulfully recited in cadenced and melodious form in unison by the Adhyapakas and vedic pundits, on all 5 days reverberate in the Temple precincts and its neighbourhood, a thrilling experience felt by the devotees which the Lord and His Consorts sparkling in the splendor of moderate number of jewels and flowers adorned would never fade from the eyes of the devotees forever. Anecdotes of miracles of the Lord heard from the elders speak of the sway of His power and protection of His simple subjects
The Devotees, mostly original residents of the village or their descendants attend the festival every year without fail to express their gratitude to their Lord for having answered their prayers or to renew their prayers for yet another year with unsullied faith, devotion and fervor.The spontaneous tear drops of the devotees speak of their prayers to give them one more year of life for their annual rendezvous with their Protector to experience his divine grace.




The Utsav committee duly honours the Adhyapakas, Vedic Pundits and the devotees. Thadheeyaradhanams on all 5 days are conducted by the individuals tastefully and traditionally.
Arrangements for bringing Garlands owned by Goddess Andal from Srivilliputtur are also being done on the last day of the Brahmotsvam.the Construction of shrines for Goddess Andal and Lord Hanuman are in the Wish-list of the devotees , to be hopefully fructified in future.
The precinct after the entrance is additionally used for more number of devotees for feasting and for Ashirvad rituals under pacca asbestos roofing braving the shine or rain. 
Due to lack of staying facilities in this deserted village the devotees and Adhyapakas reluctantly restrict their stay for a day or stay at Madurai with their relatives and shuttle in between daily.Some devotees adjust themselves to stay with the residence in the village. 
The Nithya Poojas are conducted twice daily and Thirunakshatrams and Alwar’s/Acharian’s are conducted regularly. 
To perpetuate and take the glory of this highly sanctified and venerated temple to greater heights it is the duty of the devotees and their descendants in future.

Friday, February 15, 2013

கலிதவர சேது பந்தம்

சேது அணை பற்றியக் குறிப்புகள் கம்பராமயணத்தில் மட்டுமல்லாது நிறைய இடங்களில் காணப்படுகின்றது. 'குரங்குகள் மலையை நூக்க..'(திருமாலை) , 'கலிதவர சேது பந்தம்' (அடிக்கடி உச்சரிக்கும் ஸ்வாதி திருநாள் மகாராஜா கீர்த்தனை) இன்னும் பல. ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம்**

**இப்பாடலில் அணையை ஆதிசேஷனுக்கு உருவகப்படுத்தி 'சென்றால் குடையாம்இருந்தால் சிங்காதனமாம்' என்கிற ஆழ்வார் பாடலை நினைவுப்படுத்துகிறார் கம்பர்.**

நாடுகின்றது என் வேறு ஒன்று? நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான்
‘ஓடும் என் முதுகிட்டு ‘என ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது சேதுவே. (சேது பந்தனப் படலம்)




சேதுப் பாலத்தின் அளவை இந்தப் பாடலால் அளக்கிறார் கம்பர். 100 யோஜனை (~800 miles) நீளம் , 10 யோஜனை (~80 miles) அகலம்.இந்த அணை 3 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டதாக கம்பர் -
'உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை,முற்ற மூன்று பகலிடை; முற்றவும்' என்று கூற,
வால்மீகியோ 5 நாட்களில் கட்டி முடித்ததாகக் கூறுகிறார்..

எய்தி ‘யோசனை ஈண்டு ஒரு நூறு உற
ஐ இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை ‘என்பது செப்பினார்
வைய நாதன் சரணம் வணங்கியே. (சேது பந்தனப் படலம்)

கை வண்ணம் அங்குக் கண்டேன்

**கம்பர், இராமன் தாடகையை அழித்ததையும், அகலிகை உருப்பெற்றதையும் ஒரே பாடலில் சொல்கிறார். இராமனின் பாதத்தின் ஒரு பகுதி பட்டதிலேயே அகலிகை விமோசனம் பெற்றதை கம்பன் -"காகுத்தன் கழல் துகள் கதுவ" என்று சொல்ல, இன்னும்சில இராமாயணங்களில் இராமன் காலில் பட்டுத் தெறித்த மணலிலிருந்து விமோச்சனம் பெற்றதாக படித்திருக்கிறேன்**





இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்,
இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி, மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரின்
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்,
கால் வண்ணம் இங்குக் கண்டேன். (அகலிகை படலம்)

"கை வண்ணத்தால் வீரத்தையும், கால் வண்ணத்தால் சரணாகதியையும் விளக்குகிறார் கம்பர்!"

Sunday, February 10, 2013

இற்றது கேட்டார்


கம்பனின் கவித்திறம் ஒரே பாடலில்

 **கண் இமை கொட்டினால் இராமன் வில்லையெடுத்து நாணேற்றுவதைக்  காணாமற்போய் விடுவோம்  என்று கண் கொட்டாது இருந்தனர் அவையில் இருந்தவர்கள்**




*வில் ஒடிதல்*

தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார். (கார்முகப் படலம்)


*அவையோர் இராமன் வில்லை எடுத்ததை கண்ட போதிலும், வில் முறிந்த ஓசையை மட்டுமே கேட்டனர்.இராமனின் மாண்பை ஒரே வார்த்தையில் சொல்கிறார் - 'இற்றது கேட்டார்'*

Saturday, February 9, 2013

அகநானூறில் இராமகதை

இன்று படித்ததில் மகிழ்ந்தது --
*மகாவித்வான் ரா. இராகவையங்காரின் கவிச்சக்ரவர்த்தி கம்பர்*
சங்க இலக்கியங்களிலும், வைணவப்பிரபந்தங்களிலும் இராமாயணக் கதைக் குறிப்புகள் உள்ளன. சில செய்திகள் வடமொழி நூல்களில் காணப்படாதவையாகும். தனுஷ்கோடிக்கரையில் இராமபிரான் யுத்த சம்பந்தமான ஆலோசனை நடத்துகையில், ஆலமரத்தில இருந்த பறவைகளின் ஒலியால் துன்பப்பட்டு, தன்கையமர்த்தி பறவைகளை ஒடுங்கி இருக்கச் செய்த சேதி வால்மீகியால் கூறப்படாதது கடுவன் மன்னனார் என்ற சங்கப் புலவர்,

வெள்வேல் கவுரியர் தொன்முதுகோடி
முழங்கிரும் பெளவம் இரங்கு முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்து அன்றால்" (அகநானூறு-70)

என்று பாடுவர்.

கவிச்சக்கரவர்த்தி நல்ல உரையாசிரியர்!

                 மன்னர் பெருமக்களான குலோத்துங்க சோழன். கருணாகர பாண்டியன் ஆகியோர் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கிறார்கள் சடையப்ப வள்ளல் முதலான முக்கியஸ்தர்களும் அங்கு இருக்கிறார்கள். அரசருடைய ஆணையின்படி, கம்பர் தான் எழுதிய ராமாயணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது,

தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம் 
மருண்ட புன்மையை மாற்றுவர் எனுமிது வழக்கே
உருண்ட வாய்தொறும் பொன்னுரு ளுனரத்துரைத் தோடி
இருண்ட கல்லையும் தந்நிற மாக்கின இரதம்

          என்ற பாடலைச் சொல்லி, அதற்கு விளக்கமும் சொன்னார் கம்பர்.
பல நூல்களையும் கற்றுத் தெளிந்த பெரியோர், கல்லாத முழு மூடர்களைச் சேர்ந்தாலும், அந்த மூடர்களின் பேதைமை புத்தியை மாற்றி, தங்களைப் போலவே அறிவாளிகளாகச் செய்வார்கள். அதுபோல அறிவாளிகளாகச் செய்வார்கள். அதுபோல, கறுத்த கருங்கல் பாறைகளின்மேல் தேர்களின் தங்கச் சக்கரங்கள் உராய்ந்து ஓடி ஓடி, கருங்கல் பாறைகளும் தங்க நிறமாகி விட்டன! என்பதுதான் மேற்படி பாடலின் பொருள்.

            இந்த விளக்கத்தைக் கேட்டதும், சபையிலிருந்த அனைவரும் கம்பரைப் பாராட்டினார்கள். பாராட்டு ஒலி அடங்கியது. சோழ மன்னர் கம்பரைப் பார்த்து, கம்பரே! நீங்கள் சொன்ன அந்த உத்தமமான தர்மம் உங்களிடம் அமைந்திருப்பதை நான் அறிவேன். என்றார்.

அதைக் கேட்ட மன்னர் கருணாகர பாண்டியன், அது என்ன? என்று ஆவலுடன் கேட்டார். அதற்கு அங்கிருந்த சடையப்ப வள்ளல், கம்பர் வாழ்க்கையில் நடந்த அந்த நிகழ்ச்சியைச் சொல்லத் தொடங்கினார் 


***இந்தப் பாடல் சிறுவயதில் படித்தது. நேற்று கம்பனைப் பற்றி ஆராய்ந்த போது கிடைத்தது.. இந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்லும் கம்பனை நல்ல உரையாசிரியர் என்று கூட சொல்லலாம். கவிச்சக்கரவர்த்தி அல்லவா!***

மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறையே கூவிறையே
உங்களப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்கப் பெருமானே!

மேற்கண்ட பாடல் சோழ நாட்டில் ஒருவன் அரசரைப் புகழ நினைத்து, தெருவில் தன் காதில் விழுந்த வார்த்தைகளை வைத்து உருவாக்கியது.
இதற்க்கு கம்பர் சொன்ன விளக்கம் (என்னுடைய தமிழில்)

மண்ணையுண்ட திருமால் போல், மக்களைக் காப்பவனே!
சோலைகளுக்குத் தலைவனே! நிலவுலகுக்குத் தலைவனே!
இந்நாட்டை ஆண்ட சிங்கத்தின் புதல்வனே! (சிங்கக்குட்டி)
கொடையில் கர்ணனே (கன்னா); அவனை அடுத்த தர்மனே (பின்னா); மன்னவனே; தென்னவனே;
சோழநாட்டுக்குத் தலைவனே!

FYI : கன்னா - வில்லிபாரதத்திலும் கர்ணனை இவ்வாறே குறிப்பிட்டனர்.

நம்மாழ்வாரும் -கம்பரும்

இந்தப்பாடல் - கம்பராமாயணம் 'வாலி வதை படலத்தில்' , வருந்திய அங்கதனை வாலி தேற்றுவது! (ஒரு சுவாரஸ்ய தகவலுடன்)

ஆயன பலவும் பன்னி,
அழுங்கினன் புழுங்கி, நோக்கித்
தீ உறு மெழுகின் சிந்தை
உருகினன்; செங்கண் வாலி,
‘நீ இனி அயர்வாய் அல்லை ‘
என்று, தன் நெஞ்சில் புல்லி,
‘நாயகன் இராமன் செய்த,
நல்வினைப் பயன், இது‘ என்றான்.

தீயிலிட்ட மெழுகு போல் புலம்பிய அங்கதனிடம் வாலி 'எல்லா உயிர்கட்கும் தலைவனான
இராமன் செய்ததான இச்செயல்,(நல்வினைப் பயன்) யான் முன் செய்த புண்ணியத்தின் பயனாகும்' என்றான். வாலி தன் தவற்றை உணர்ந்து, தண்டனையை ஏற்று சொன்ன வரிகள்

ஒரு ஒற்றுமை கண்டேன் - கம்பனுக்கு முற்ப்பட்ட நம்மாழ்வாரும் 'தீயோடு உடன் சேர் மெழுகாய்' என்று மெழுகை உவமையாக்கியிருக்கிறார்!:)

இளங்கோவும் - கம்பரும்

பள்ளியில் சிலப்பதிகாரத்தில் படித்த 'தற்குறிப்பேற்றவணி' - கோவலன் மதுரையை அடைந்த போது மதிலில் இருந்த கொடி 'வாரா' என அசைந்ததாக இளங்கோ பார்வை. இன்று படித்த கம்பன்- 'ராமன் மிதிலையை அடைந்த போது 'ஒல்லை வா' என கொடிகளாகிய கைகளை நீட்டி அந்நகரம் அழைப்பதாக!'**

மை அறு மலரின் நீங்கி, யான் செய்
மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள் : என்று,
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி, அந்தக் கடி நகர்,
கமலச் செங்கண்
ஐயனை ‘ஒல்லை வா ‘என்று
அழைப்பது போன்றது அம்மா. (மிதிலைக் காட்சிப் படலம்)