Wednesday, December 25, 2013

செய்வன திருத்திச் செய்

நான் காணும் IT (1):

         "தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
         ஈரத்திலே உப காரத்திலே
         சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
         தருவதிலேஉயர் நாடு" (பாரதியார்)

                      '7 வருட வேலை' பத்தி இதே blogல் எழுதினபோது கொஞ்சம் நம்ப வேல அனுபவம் பத்தி எழுதலாம்ன்னு ஒரு எண்ணம்.. பல ரசனையான கதைகளும் இருக்கு.. நேரம் கிடைக்கும் போது update பண்ணலாம்னு பார்த்தேன். 12 நாள் விடுமுறை நல்ல வாய்ப்பு..
                     அரசாங்க உத்தியோகத்தில் வேல எப்படி செய்வார்கள் என்று அவ்வளவு தெரியாது. ஆனால் அனைவரும் தங்கள் பொறுப்புணர்ந்து செய்வதால் தான் இன்றுவரை  அரசாங்கம் ஓடுகிறது. ஒரு சில முறை அரசாங்க அலுவலம் சென்றுள்ளேன். sslc, +2 certificates attestation வாங்கப் போனது. கொஞ்சம் பரிதாபகரமான காட்சி தான் அது. இப்போது நான் வேலை செய்யும் இந்த Corporate  Office சூழ்நிலைகளை நினைத்தால் மிக உரிய இடத்தை அந்த அரசாங்க ஊழியர்களுக்குத் தர நாம் மறந்துவிட்டோம்.(ஆனால் என்னைப் பொருத்தவரை நான் இருப்பது ஒரு உயரிய இடமே அல்ல.சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம்ன்னு நினைக்கறேன்) மக்கள் தொகையில் <2% மட்டுமே இருந்தாலும் இந்த மக்களைத் தாங்குபவர்கள் அவர்கள் தான்.
                     அலுவலகத்தில் அடுக்கிவைக்கப்பட்ட கோப்புக்குவியலில், ஒரு பழைய wire chair, wooden table, காலை 8 மணிக்கு சரியாக வந்துவிடுவர். ஒரு பெரிய ஹால், 10-12 பேர் ஒரு sectionக்கு. 4-5 பழைய fan, நல்ல காற்றோட்டம், வெள்ளிச்சம் வர அனைத்து கதவுகளும், ஜன்னலும் திறந்திருக்கும். பெரும்பாலும் 2-3 Tube light தான் இருக்கும், பெரும்பாலும் அதுவும் அனைந்திற்க்கும். இயற்கையாக வரும் காற்று, வெளிச்சம் அவற்றோடு இயந்த வாழ்வு. அவர்களும் விடுமுறை நாட்களிலும் வேலை செய்து பார்த்திருக்கிறேன். முக்கியமாக நாட்டுப்பற்றோடு ஆக்-15 Office செல்வார்கள். 6 மணி ஆனா வீட்டிற்க்கு வரலாம், வீட்டிலிருந்து Connect பண்ண வேண்டிய அவசியம் இல்லை. குடும்பத்தோடு செலவிட நேரம் நிறைய இருந்தாலும் செலவிட பணம் Coorporate கலாச்சாரம் அளவிற்கு இருக்காது, அவை இல்லாததால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டனர்.  பல குற்றங்களுக்குக் காரணம் இந்த அளவுக்கு அதிகமா பணமும், வித்யாசமான கலச்சரமும்ன்னு நினைக்கறேன்.
                 



இத மனசுல வச்சு நம்ப ஆபீஸ்ல நான் படிச்சது, பார்த்தது சேர்த்து Corporate/Software கம்பெனில என்ன எல்லாம் செய்யறோம்ன்னு பார்த்தா சில விஷயம் தெளிவா தெரியறது.. நாட்டையும், வீட்டையும் பார்த்துக் கொள்ள நேரம் இல்லை; இயற்கையை விட்டு விலகியே போகிறேன்; ஒரே இடத்தில உக்கார்ந்து வேல செய்யறதால உடல் சார்ந்த வேலைகள் இல்லை; எப்போதும் ஒருவித tension;புத்தகங்கள்/சொற்ப்பொழிவுகளுக்கு நேரமின்மை இத்யாதி.. சரி அத விடலாம்.. நம்ம Officeல என்ன தான் பண்றோம்ன்னு பாக்கலாம்.. சிலது ஏற்கனவே எங்கோ படித்தது., பலனில்லாமல் தான் பல நேரங்களை வீணடிக்கறோம். பணம் மட்டுமே குறிகோளாகத் தெரிவதால் , திருத்திக்கொள்ள நிறைய இருக்கிறது.

காற்றுக் கூட 'Access card' இல்லாமல் உள்ளே புகமுடியாத படி, பகலிலும் நல்ல வெளிச்சமிகும் விளக்குகளும், எப்போதும் AC குளிருடன் அமைந்த கட்டடங்கள்.  மகேந்திர வர்மனும், மாமல்லனும், சோழர்களும் கட்டிடக்கலை வளர்த்த நம் நாட்டில் இப்படியுமொரு இயற்கையை விலக்கிவைக்கும் அபத்தம்!


சத்தியமா எந்த  IT Companyயும் விதிவிலக்கில்லை.. கொஞ்சம் extra points வேணா add ஆகலாம்..எந்த  point delete பண்ண முடியாது

நான் கண்ட IT இதுவரை :
1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக வடை கடை , சிகரட் விற்கும் பொட்டி கடை இருக்கும்
2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .
3) பிரதமர் அலுவலகம்/தலைமைச் செயலகம் மாதிரி ஒரு 10 -15 security சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.
4) வரும் அனைத்து கார்களின் (Trunck/dicky)கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை எனக்குத் தெரியாது .
5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை Securityயிடம் காட்ட வேண்டும். மாலை மட்டும் மிகச் சரியான நேரத்திற்குக் கிளம்பிவிடும்.
6) உள்ளே செல்லும் முன் கொண்டுசெல்லும் பையை திறந்து காட்டவேண்டும். Metal Detector சோதனை உண்டு. 
7) சில நேரங்களில் Metal detector வைத்து ஒரு தனி அறைக்குள் அழைத்து சோதனை செய்யப்படும் . Appraisal/Bonus கொடுக்கவில்லை என்று குண்டு ஏதாவது  வெடிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது. அதுக்கு தான் இந்த சோதனை போல. 
8 ) நாட்டுல எவ்வளவு மின்சார வெட்டு இருந்தாலும் reception, Workplace, canteen, rest room இப்படி எல்லா இடத்திலையும் பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும். 
9) Canteenல் இருக்கும் டிவியில் CNBC/NDTV  மாதிரி ஏதாவது ஓடும். யாரும் அதைக் கண்டும் காணாமல் இருப்பார்கள். 
10) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .
11)  Lunch தவிர மற்ற நேரங்களில் இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும். 2008 க்கு முன்னால் Boost, Horlicks எல்லாம் தாராளமாகக் கிடைத்தது. 
12) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.
13) சில பல உண்மை உழைப்பு உயர்வு பற்றி வெளி நாட்டு மேதாவிகளின் வாசகங்கள் ஆங்காங்கே ஒட்டிருக்கும்.
13) Canteen - Cafeteria, Toilet - Rest room என்று மாற்றப்பட்டிருக்கும்.
14) Rest Room hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .
15) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா Canteenல் இடம் பிடிக்க வேண்டும் . சாப்பாடு எப்படி இருந்தாலும் ஆஹா-ஓஹோ என்று புகழ்ந்து கொண்டு சாப்பிடும் கூட்டம் கண்டிப்பாக இருக்கும். கடைக்காரர் 30 ரூபாய் மீதி தராமல் நம்மை நாளை அதே கடையில் வாங்க வைப்பார். சாயந்தரம் இதே போல் வடை-பஜ்ஜி ஸ்நாக்ஸ் இத்யாதி கிடைக்கும். 
16) யாரும் கையால் சாப்பிட மாட்டார்கள். பல நூறு கொடுத்து 'Tupperware'  Box தான் உணவு கொண்டுவரும் பாத்திரம். யாரும் கையையும், சாப்பிட்ட Plateம்/Box அலம்புவதில்லை.
17) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண Oven அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.
18) வேலை செய்யும் ODC உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . AccessCard வேறு எந்த ODC உள்ளும் செல்ல அனுமதி இல்லை .
18) அலுவலகத்தை சுற்றிலும் புல்வெளி,தோட்டம்,அழுகு செடிகள் இருக்கும். மாலை 4-5 மணியளவில் College மாதிரி ஜோடி-ஜோடியாக நடப்பார்கள். நன்றாக அமர்ந்து பேச வசதி இருக்கும்.  இந்த வகையில் 6 மணி Onsite கால் வரதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கலாம். 
19) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .
20) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் . நான் பார்த்தவரை பெரும்பாலும் தெலுங்கர்கள் தான் அதிகம். ஏமி என்று ODCயில் கத்தினால் min 10 பேர் திரும்புவார்கள்.. கிட்டத்தட்ட தசாவதாரம் படம் மாதிரி இருக்கும்.
21) உடற்பயிற்சி கூடம் ஒன்று இருக்கும். ஏதோ நாங்களும் உடற்ப்பயிற்சி செய்வதாகக் கூறி 2 வாரம் ஆர்வமோடு செல்வார்கள்.அந்த வகையில் 1-2 மணி நேரம் ஓட்டலாம்.
22) காதலர்கள் கலந்துரையாட மொட்டைமாடி, பூங்காக்கள் இருக்கும். பூங்கா பராமரிக்க தனியாக 2-3 பேர் இருப்பார்கள். அதற்கும் பெரும் செலவு செய்வார்கள்.
23) Security நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”
24) ஒரு ATM இருக்கும். சம்பளம் வந்து முதல் 2 நாள் மட்டும் வீடு வாடகை கொடுக்க கொஞ்ச பேர் எடுப்பார்கள். 
25) ஒய்வு எடுக்க (தூங்க) தனி அறை கண்டிப்பா உண்டு .எப்போதும் 5-6 பேர் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். Registerல் கையொப்பமிட்டு தூங்க வேண்டும்.
26) பெரும்பாலானவர்களின் Computerலையும் Dinamalar.com, Irctc.co.in, ஏதாவது ஒரு சினிமா theater booking link openல இருக்கும்.
27) கண்டிப்பா வாரம் ஒரு Treat, மாதம்  ஒரு முறை கொஞ்சம் பெரிய Treat, Quarter ஒரு முறை Project Get together. அந்த வகையில் 1 நாள் முழுக்க ஓட்டலாம். நான் Non-Veg Hotel/Restaurant போகாததால இது வரை எந்த Treatம் கொடுத்ததுமில்லை, போனதுமில்லை.
28) பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பேரில் கேக் பூசும் நிகழ்ச்சி. மாதம்/வாரம் 1 முறை. உணவை waste செய்யும் வகையில் ஒரு 1 மணி நேரம் போகும். இதுக்கும், நமக்கும் ரொம்ப தூரம். Cakeல முட்டை (!) இருக்கும் அப்பறம் நம்ப கலாச்சாரத்துக்கு நேர் எதிரானதுன்னு என் வாதம். 
29) 20% TASMAC Account holders தான். உள்ளே 'Smoking Prohibited' என்றும் , 'Smoking Zone' என்றும் ஒரு பகுதி இருக்கும். நமக்கு சம்மந்தமில்லாத பகுதி. கேள்வி ஞானம் தான்.
30) Independence day, Republic day, Gandhi Jeyanthi  இது எல்லாம் கொண்டாட மாட்டார்கள். இவை வெள்ளி/திங்கள் கிழமைகளில் வந்தால் மட்டும் மகிழ்ச்சி. நாமே போகம்ன்னு நினைத்தாலும், எந்தவித விழாவும் நடத்தற மாதிரி தெரியல.
31) ஓட்டுப் போட கண்டிப்பாக லீவ் இருக்காது. ஏன்னா, Clientக்கு இத inform பண்ண முடியாது.
32) 300-400 KM தொலைவில் இருக்கும் ஊருக்குப் போக 'Onsite Manager' approval கண்டிப்பாக வேண்டும். 2 மாதம் முன்னாடியே பிளான் பண்ணிச் சொல்ல வேண்டும். 
33) Onsite/Client மீட்டிங் பெரும்பாலும் 'Mute'லயே attend பண்ணலாம். 
34) 20*9 என்று சாதாரண Monthly billing amount கணக்கிடக்கூட கண்டிப்பாக Calculator/Excel formula பயன்படுத்த வேண்டும்.
35) Mother's day, Women's day கண்டிப்பாகக் கொண்டாடப்படும் 
36) Christmas வாரத்தில்  ODC முழுமைக்கும் பெரும் பொருட்செலவில் decoration செய்யப்படும். இதில் பல குழுக்கள் இருக்கும். இதில் இருப்பதாகக் கூறி  Dec மாதம் முழுதும் மந்தமாகவே வேலை நடக்கும். பொங்கல், தீபாவளி கண்டுகொள்ளப்படுவதில்லை
37) Cultural day கொண்டாட ஒரு குழு. நடனப்பயிற்சி எடுக்கரதுலயே 2-3 மாதம்/வாரம் தள்ளப்படும்.எல்லாம் பெரும்பாலும் வேலை நேரத்தில் தான்.அது என்ன 'Cultural'ன்னு இது வரை தெரியல
38) LKG, UKG படிக்கும் குழந்தைக்கு Print out எடுக்கும் ஆசாமி ஒருவர் கண்டிப்பாக இருப்பார்.
39) Water filterல் தண்ணீர் cane மாற்றிவிட Security Officeக்கு போன் செய்து யாராவது வரும் வரை காத்திருக்கும் கூட்டம் இருக்கும். 
40) Dress Code பற்றி சொல்லத் தேவையில்லை.. அதுவும் வெள்ளிக்கிழமையானா போதும்!:)

(P.S: இந்த photoக்கும், pointsக்கும் சம்பந்தமில்லை.. ஏதோ googleல randomமா செலக்ட் பண்ணினது! :) )

Monday, December 23, 2013

நியூயார்க்கில் சனாதன தர்மம்!

நியூயார்க்கில் சனாதன தர்மம்:

                          'அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்' என்பது போல, அகத்தாலும், புறத்தாலும்  Clientக்கே அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டதால், அவனுடைய பண்டிகைகளைக் கொண்டாடவிட்டலும், சம்பளமில்லா கட்டாய விடுப்பு எடுக்கவேண்டியாகியது.. இந்தமுறை கிட்டத்தட்ட 12 நாட்கள் விடுமுறை... வெள்ளை மழை (snow) - வேற்று நீர் (மழை) -கொஞ்சம் வெயில் என்று மாறி மாறி நிலையில்லாமல் இருப்பதால் நீண்ட நெடுந்தூரப் பயணமே 12 நாட்களைக் கழிக்க வழி.. தீபாவளி-பொங்கல் Ticket book பண்ற மாதிரி சுமார் 4 மாதம் முன்பே Airடிக்கெட் விற்பனை தொடங்கி 'நல்லா' Plan பண்ணி கிளம்புபவர்கள் இந்த ஊரை விட்டு ஓடிவிட்டார்கள்.. இப்படி போகக்கூடிய இடம் பெரும்பாலும் 2-3 தான்- Florida, Grand canyon, எதாவது Cruise பயணம்..

                            நம்ப பழக்க வழக்கத்திற்கு Long Drive கொஞ்சம் கஷ்டம் தான்.. சென்ற முறை Florida போனபோது இருந்த அனுபவமே சாட்சி; (தூய தமிழில் பேசாவிட்டாலும்) தமிழ் தெரிந்தவர்களின் மத்தியில் தமிழைத் தேடுவது போல, நானும் போகும் இடமெல்லாம் Pure-Veg உணவு தேடி இரண்டுமே கிடைக்காமல் போவதே வாடிக்கை.. 'இது தனி, அது தனியாகச் சமைப்பார்கள்' என்று Veg- NonVegக்கு நண்பர்கள் விளக்கம் கொடுத்தாலும் இன்னும் மனம் ஏற்காமல் 2 நாட்கள் ஆனாலும் உண்ணாமல் கழித்திருக்கிறேன்.. இம்முறை அது சாத்தியப்படாததால் Long Drive தவிர்த்தேன்.. கடந்த 1  வாரமா, Client தங்களுடைய பண்டிகைகளுக்கு (Chritmas, NewYear) என்னிடமும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.. அது பரவாயில்லை.. இங்கு வந்து நம் மதத்தை, திருவிழாக்களை மறந்து இந்தப் பண்டிகைகளை போலியாகக் கொண்டாடும் நம்மவர்கள் அலட்டல் தான் அதிகம்.. இதிகாச, புராணங்களையும், கீதையும் தந்த நம் மண்..ஆனால் நம்மவர்களும் என்னிடம் வாழ்த்து பரிமாறியதால் கொஞ்சம் அதிகமான மனச் சோர்வோடு தான் இருந்தேன்.. Offshore Team, HR, Admin அனைவரிடமிருந்தும் வாழ்த்துக்கள்.. வெட்கம் கேட்ட பிழைப்பு.. சிலருக்கு 'New Yr celebrations பற்றி விளக்கமும் கொடுத்தேன்.. அவர்கள் கேட்காமல் போனாலும் பரவாயில்லை!




                      அப்போது தான் எதேர்ச்சையாக நியூயார்க் பயணம்..எல்லாம் சுற்றி முடித்து, Pure Veg கிடைக்காததால் சற்று பசியுடன் வீடு நோக்கி வர Penn station நெருங்கிக் கொண்டிருந்தேன்.. 34th Street -6 th Avenue அருகில், மாலை 6 மணி இருக்கும், Signal Cross செய்து கொண்டிருந்தேன்..அன்று நல்ல Climate.. இந்த Winterரிலும் வியர்வை.. அதனால் தான் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள்,அலை அலையாய் வீதிகளில் உலாவிக் கொண்டிருந்தார்கள்.. திடீரென்று மத்தளச் ஓசையுடன், 'ஹரி போல்,ஹரி போல்' என்ற ஹரி நாம சங்கீர்த்தனம்.. அதில் பாடிய 5 பேரும் இந்தியர்கள் அல்லர்.. ISKCON சேர்ந்தவர்கள்.. முக்கியமாக இந்த ஊர் மக்கள்...பிரம்மித்துப் போனேன்.. நிஜமாகவே வியர்த்தது.. 3-4 நாட்களாக மனதிலிருந்த சோர்வு வறண்டது நிமிஷத்தில்!.. ஏற்கனவே எடிசனில் பலமுறை இது போன்ற வீதி பஜனைகளைக் கண்டிருக்கிறேன்.. அவை எல்லாம் இந்தியர்கள் அதிகமுள்ள இடம்.. ஆனால் இது பலதரப் பட்ட மக்கள் உலவும் இடம்..

                        என் நெற்றியில் இருந்த குறிகளைக் (திருநாமம்) கண்டதும் அவர்கள் மகிழ்ச்சியில் குதித்தே பாடினார்கள்.. மகிழ்ச்சி. (எங்கு சென்றாலும் திருநாமத்தோடு செல்வது தான், Client meeting போனாலும்., அது பற்றி பல சுவையான அனுபவம் உள்ளது.. மற்றொரு முறை எழுதுறேன்) ! யாருக்கும் எந்த இடையூறும் இன்றி அவர்கள் பாடிக்கொண்டிர்ந்தார்கள்.. சனாதன தர்மம் என்றும், எங்கும் தழைக்கும் என்பதில் எனக்கு மற்றுமொரு ஆதாரம்.. நம்மவர்களே பிற பண்டிகைகளைக் கொண்டாடினாலும் இங்குள்ளவர்கள் சேர்ந்து ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தது ஒப்பற்ற மகிழ்ச்சி, என் பசியும் மறந்தது.. இது ஏதோ எதேர்ச்சையாக நடந்தது அல்ல எனக்கு... அவர்களின் பக்தியை ரசித்துவிட்டு சற்று தள்ளி வந்தேன்.. Penn Station வாசலில் ஒரு பெரிய கூட்டம் Bible வாசித்துக் கொண்டிருந்தது.. இங்குள்ள பூர்வக்குடி மக்கள் தான்.. முன்னர் சொன்னதிற்கும், இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு..

                  இந்த நம்மாழ்வார் பாடலும், விளக்கமும் தான் இன்று வரை மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.. நம்மவர்கள் தொலைத்துவிட்டார்கள், அதை அவர்கள் பிடித்துக்கொண்டிருந்தார்கள் சனாதன தர்மத்தை, ஹரி பக்தியை.. நம்மவர்கள் திருந்தும் நாள் எந்நாளோ?

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவ விதிவழி யடையநின் றனரே.

***அந்தந்த அதிகாரிகள் தங்கள் தங்களுடைய ஞானத்தாலே அறியப்படுகிற பலபல மார்க்கங்களில் அந்தந்த தெய்வங்களை ஸ்வாமிகளென்றெண்ணி வணங்குவார்கள்; அந்தந்த அதிகாரிகளால் தொழப்படுகிற தெய்வங்கள் அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றனவே; எதனாலே என்னில், அந்தந்த அதிகாரிகள் தங்கள் தங்கள் விதி வழி பலன்பெறும்படியாக அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக எழுந்தருளியுள்ளான் ஸர்வஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன்! அத்தெய்வங்கள் தாமாகவே பலனளிப்பதில்லை; எம்பெருமான் தங்களிடத்தில் அந்தர்யாமியாக இருப்பதால் தான் தாங்கள் பலனளிக்கத் திறமை பெறுகிறார்களென்கிறார் ***

மத மாற்றம் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்தேன்.. காஞ்சி பெரியவரின் 'தெய்வத்தின் குரலில்' இது பற்றி மிக அழகாகக், நயமுடன் கூறியிருக்கிறார்  அனைவரும் ஒரு முறை படித்தாலே போதும்., யாருக்கும் எந்தக் குழப்பமும் இருக்காது..

தெய்வத்தின் குரல் - மதங்களின் ஒற்றுமை:

"எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன. ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு இன்னோரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்குகளும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அநுக்ரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை. ஒவ்வொரு தேச ஆசாரத்தையும், ஒவ்வொரு ஜனக்கூட்டத்தின் மனப்பான்மையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து, அவரோடு சேருவதற்கு வழி செய்பவையே. எனவே எவரும், தங்கள் மதத்தை விட்டுவிட்டு இன்னொன்றுக்கு மாறவேண்டியதில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தாங்கள் பிறந்த மதத்தைக் குறைவு படுத்துவது மட்டுமின்றி, தாங்கள் சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்; கடவுளையும் குறைவு படுத்துகிறார்கள்.

'தங்களது பிறந்த மதத்தில் குறை தோன்றியதால்தான் ஒருவர் அதை விடுகிறார். ஆனால் புதிதாக சேருகிற மதத்தையும் அவர் குறைவுபடுத்துகிறார் என்று ஏன் ஸ்வாமிகள் சொல்கிறார்?' என்று உங்களுக்குத் தோன்றலாம். சொல்கிறேன்; கடவுள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற எண்ணம் இல்லாமல் அவரைக் குறுக்குவதால்தானே ஒரு மதத்தைவிட்டு இன்னொன்றில் சேருகிறார்கள்? தங்கள் மதத்துக் கடவுள் பிரயோஜனமில்லாதவர் என்று நினைத்து இன்னோரு மதத்துக்குத் தாவுகிறார்கள். மாறுகிற புதுமதக் கடவுளாவது எல்லோரையும் தழுவுவதாக நினைக்கிறார்களா? இல்லை. அப்படி நினைத்தால் மாறவே வேண்டாம். இவர்கள் தாங்கள் பிறந்த மதத்திலேயே இருந்து வழிபட்டாலும், இப்போது இவர்கள் மாறுகிற மதத்தின் கடவுள் இவர்களுக்கு அநுக்கிரகம் செய்வார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாததால்தானே மதமாற்றத்துக்கே அவசியம் ஏற்பட்டது. அதாவது தாங்கள் மாறுகிற புது மதத்துக்கும், அதன் கடவுளுக்கும்கூட இவர்கள் குறுகலான எல்லை காட்டி விடுகின்றனர். ஒரு மதத்திடம் கௌரவ புத்தி இருப்பதாக நினைத்து அதற்கு மாறுகிறபோதே அதை வாஸ்தவத்தில் அகௌரவப்படுத்தி விடுகிறார்கள்.

மற்ற மதங்களும் ஹிந்து மதத்துக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், நம்முடைய ஹிந்து மதம் ஒன்று தான். "இது ஒன்றே மோட்ச மார்க்கம்" என்று சொல்லாமலிருக்கிறது. நம்முடைய வைதீக மதம்தான் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பதே கிடையாது. ஏனென்றால் ஒரு பரமாத்மாவை அடைவதற்கான பல மார்கங்களே பல மதங்களும் என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்த விசால மனப்பான்மையைக் குறித்து பெருமைப்பட வேண்டும். வேதம் 'ஒரே ஸத்தியத்தைத்தான் ஞானிகள் பல பெயர்களில் சொல்கிறார்கள்' என்கிறது. கீதையில் பகவான், 'எவன் எந்த விதத்தில், எந்த ரூபத்தில் வழிபட்டாலும் அவனுடைய சிரத்தையை நானே விருத்தியாக்கி அவனை அதே வழிபாட்டில் நிலைப்படுத்துகிறேன்' என்கிறார். ஆழ்வார் 'அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் இறையவர்' என்கிறார். இதனால்தான் மற்ற மதங்களில் செய்வதுபோல் மதமாற்றம் செய்வது (proselytisation) , அதற்காகத் தண்டிப்பது (Persecution, Crusade, Jehad) முதலான போர்களில் படையெடுத்துச் சென்று நிற்பந்தமாகத் தங்கள் மதத்துக்கு மற்றவரைத் திருப்புவது முதலான காரியங்களில் ஹிந்துக்கள் என்றுமே இறங்கியதில்லை. நம்முடைய நீண்ட கால சரித்திரமே இதற்குச் சான்று. சகல சரித்திர ஆராய்ச்சிகாரர்களும் ஒப்புக் கொள்கிற விஷயம் இது. தூரக்கிழக்கு (Far East) முதலான தேசங்களில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் முதலிய ஹிந்து ராஜ்யங்கள் ஏற்பட்ட போதுகூட நிர்பந்த மத மாற்றமே இல்லை (Forced Conversion) என்றும் நம் கலாச்சாரத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு அந்நியர்களே நம் மதத்தைத் தாங்களாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் சரித்திரக்காரர்கள் சொல்கிறார்கள். அநேக சமயங்களில் வியாபாரம் முலமே நம் மத அம்சங்கள் பிற தேசங்களில் புகுந்தது என்றும், வாள் மூலம் அல்ல என்றும் சொல்கிறார்கள்.

என் அபிப்ராயப்படி ரொம்பவும் ஆதி காலத்தில் லோகம் முழுவதிலும் வேத மதம்தான் இருந்தது. பிற்பாடு ஆங்காங்கே வெவ்வேறு மதங்கள் உண்டானாலும் நம் மதத்தின் அம்சம் குறைந்தபட்சம் இடிபாடுகளாக (Ruins) பழைய ஞாபகச் சின்னங்களாக (Relics) வாவது அங்கெல்லாம் இன்னும் காணப்படுகின்றன. இப்படி நான் சொல்வதை ஒப்புக் கொள்ளாத ஆராய்ச்சிகாரர்களும் நம் பரத நாகரீகத்தை மற்ற நாடுகளில் தாங்களாகவே விரும்பி ஏற்றும் கொண்டார்களேயன்றி பலவந்தத்தின் மீதல்ல என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒருத்தனைப் புது மதத்துக்கு மாற்றுவது என்றால் அதற்கென ஒரு சங்கு (Ritual) இருக்க வேண்டும். இப்போது 'கன்வெர்ட்' செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று—ஞானஸ்தானம் (Baptism) என்கிற மாதிரி ஏதாவது ஒன்று—இருக்கிறது. மற்ற எந்த மதத்தையும்விட மிக அதிகமான சடங்குகளை சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு மற்ற மதஸ்தன் ஒருத்தனை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக் காணோம். இதுவே நாம் மதமாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.

ரயிலடியில் பிரயாணிகள் வந்திறங்கியதும் ஜட்காக்காரன், ரிக்ஷாக்காரன், டாக்ஸிக்காரன் என்று பல பேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எவனுடைய வண்டியில் ஏறிக் கொண்டாலும் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப் போட்டி போடுவதைப் தவறு என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் பிழைப்பு. ஆனால் கடவுள் என்கிற ஒரே லக்ஷியத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம்.

நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதாம். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் இருக்கும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலகவேண்டியதில்லை.

மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும், அநுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒரே போல் ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே, எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்; 'யூனிஃபார்மிடி' அவசியமில்லை. 'யூனிடி' இருப்பதே அவசியம்."






Tuesday, December 10, 2013

சக்கரவர்த்தித் திருமகன்

'ஆச்சார்யா' இராஜாஜி - பாரத ரத்னாவின் பிறந்தநாள்.

                            இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் நிறைந்திருப்பவர். சாதி-மதம் என்று வெற்று அரசியல் பேசும் இன்றைய அரசியலார் முன், இரண்டையும் ஒழித்து வாழ்ந்து காட்டியவர். 'கலப்பு மனம்'  என்று மேடையில் மட்டும் பேசாமல், தன் வீட்டிலேயே அதைத் தொடங்கியவர். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், ஆலயப் பிரவேசம், கள்ளுக்கடை எதிர்ப்பு இன்னும் பல, நமக்காகவே!. 'அவா' என்று தூற்றியவர்க்கும் அரசியல் அடையாளம் கொடுத்தவர்! அவரின் 'குலக் கல்வி', ஹிந்தி ஆதரவு இது போன்றவற்றை நாம் மதிக்காததால் தான் இன்றும் பின்தங்கி உள்ளோம் என்பது என் அனுபவப்பூர்வ உண்மை! மற்ற தலைவர்களின் சிலைகளைச் சாதிச் சங்கங்களும், கொள்கைகளை அரசியல் கட்சிகள் வெற்றுக் கோஷங்களுக்காகப் பராமரித்தாலும், இவரின் கொள்கைகளையும்-சிலைகளும் யாராலும் பேணப்படாமல் உள்ளது..காங்கிரசே மறந்தாலும், பிஜேபி இன்று நினைத்தது கொஞ்சம் மகிழ்ச்சி!

                             வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன் என்ற இரண்டு புத்தக இரத்தினங்களைக் கொடுத்தவர்.  "சக்ரவர்த்தி திருமகன்" காப்பியத்திற்காக 1958ம் ஆண்டு "சாகித்ய அகாடமி" விருது வழங்கப் பட்டது. இராகமாலிகை, MS குரலில் அவரின் 'குறை ஒன்றும் இல்லை' அவரின் மற்றுமொரு இரத்தினம்! இவர் கல்கி மற்றும் இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். பிறந்த நாள் கொண்டாடும் நடிகரை போற்றும்  அனைவரும் நமக்காகவே வாழ்ந்த இந்த மாமனிதர் (இன்று 10/12), நாளை மற்றுமொரு யுக புருஷரையும் (12/11)  கொஞ்சமாவது நினைக்க வேண்டும் என்று கூறும் நிலையில் தான் உள்ளோம்!

(தொண்டர்களோடு ஒருவராக, காலில் காயத்திற்கான கட்டுடன்-மக்கள் சேவையில்)



குமரி மாவட்டம் விடுதலை போரில் இராஜாஜியின் பங்கு (Tamil Wikipedia):

தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜி அவர்களிடம் அலோசனை கலரும் படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவர் காமராசை நம்பாமல், இராஜாஜியை நம்பினார். அவரை சந்தித்த ரசாக: “இது விஷயமாக நான் முதலில் சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் ஒன்று தான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்”.திரு. காமராசரால் தீர்வுகாண இயலாத நிலையில், ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: “திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வழக்கறிஞர் தைக்காடு திரு. சுப்பமைணிய ஐயரைத் தொடர்பு கொண்டு, இராஜாஜியின் அறிவுரையையும் அதன் மீது தங்களது முடிவும் அறிவிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைச் சட்டம் 527 (C.R.P.C) –ன் அடிபபடையில் திரு – கொச்சியில் நடந்து வருகின்ற பதினொரு வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.



கள்ளுக்கடை எதிர்ப்பு:
             சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி இருந்த போது மது கடைகளை மூடும் சட்டத்தை கொண்டு வந்தார்,  அதை பெரியார் மிக கடுமையாக எதிர்த்தார் ராஜாஜி மேல் ஜாதிக்காரர், கீழ்ஜாதிகாரர்களின் கஷ்டமும்  தொழிலாளர்களின் சிரமமும் அவருக்கு தெரியவே தெரியாது, உழைத்து உடல் வலியில் இருப்பவன் ஒரு கிளாஸ் தண்ணி போட்டால் தான் அசைந்து உறங்க முடியும், எனவே உடனடியாக சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றார் பெரியார்.
    அதற்கு ராஜாஜி என்ன பதில் சொன்னார் தெரியுமா? மது விலக்கு சட்டத்தை அமலபடுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்குமோ? பெருவாரியான மக்கள் அதை ஏற்க மாட்டார்களோ? என்று எல்லாம் எண்ணி பயப்பட்டேன், ஆனால் நண்பர் ஈ.வெ,ரா இந்த சட்டத்தை எதிர்ப்பதிலிருந்தே இதை  மிக சுலபமாக அமுல் செய்துவிட முடியும், எல்லா மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதை புரிந்து கொண்டேன், ஏன்என்றால் பத்து பேர் ஏற்று கொள்வதை, பத்து பேருக்கு சரியெனப் பட்டதை பெரியார் தவறு என்பார், ஏற்று கொள்ளவும் மாட்டார் என்பது தான் ராஜாஜியின் பதில்.
    உண்மையில் பெரியார் ராஜாஜியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மதுவிலக்கு சட்டத்தை எதிர்த்தார்.ஆனால் பெரியாரின் வாரிசுகள் என்று தங்களை அழைத்து கொள்ளும் கழக கண்மணிகள் தான் 1967-ல் மதுகடைகளை திறந்து வைத்தார்கள்.

வியாசர் விருந்து (எங்கோ படித்த நிகழ்ச்சி):
வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ என்னும் காப்பியத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரால், எளிய தமிழ்நடையில் ராஜாஜி எழுதி, அந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி வீதியில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு தேவர் திடீரென வந்தார். அவருக்கு உரிய பாணியில் 'வியாசர் விருந்து' பற்றிப் பேசினார். சில வரிகள் -  ' இந்தக் கண்ணுக்குப் பார்வை கிடையாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்பொழுது சொப்பனத்தில் பார்வைகள் நடைபெறுகின்றன என்றால் அதைப் பார்ப்பதுதான் அகக்கண். அதைப் பார்ப்பதுதான் மனக்கண் என்பதை யோகிகளும் ஞானிகளும் கண்டார்கள். இதைக் கருமிகள் நித்திரையிலே அனுபவிக்கிறார்கள். அந்தக் கண் கிடைத்தது வியாசருக்கு. அதைக் கொண்டு எழுதினார் இந்த புத்தகத்தை என்பதுதான் அடியேன் இன்றைக்குச் சொல்ல வேண்டுவதாகும். அந்த நிலைமையில் அந்தத் தன்மையில் உயர்ந்து நின்றதுதான் இந்த பாரதம். அப்பாரதத்துக்குள்ளே பெருமணியாகக் கிடைத்ததுதான் இந்த பகவத் கீதை. எனவே வியாசர் முனிவர் எழுதிய மகாபாரதம் என்பதை ‘வியாசர் விருந்து’ என்பதன் பெயரால் ராஜாஜி அவர்கள் எழுதி வழங்கி உள்ளார்கள். அதனை வாங்கிப் படித்து பயனடைவது நமது கடமை'

                                  சாதிகளைக் கடந்து நிற்கும் தலைவர்களையும் சாதி பெயர் வைத்துத்தான் இன்று பார்க்கிறது சமூகம். இதற்கு இராஜாஜியும் விதிவிலக்கில்லை!. நாட்டிற்காக எதுவுமே செய்யாத நடிகரின் பதாகைக்கு பால்-பன்னீர் அபிஷேகம் பண்ணும் சமூகம், இன்று நலிந்த நிலையில் இருக்கும் எங்கள் ஊரில் (மதுரை-திருமங்கலம்) இராஜாஜியின் சிலை இது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டி உள்ளது. ஊருக்குப் புதியவர்களுக்கு இது ஒரு அடையாளமே தவிர, யாரும் கவனித்து நான் பார்த்ததில்லை.
                              AIRல்.,

மூதறிஞர் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை!தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர் ராஜாஜி. "இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல்" என்ற பெருமைக்கு உரியவர். "என் மனச்சாட்சியின் காவலர்" என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்டவர்.

ஆம்! அவர் சாதித் தலைவரில்லை; சாதித்த தலைவர்! 

வெகு சில இடங்களில் மட்டுமே அவர்க்குச் சிலை இருக்கும், அதில் ஒன்று எங்கள் ஊர் - திருமங்கலம், மதுரை. இன்றும் கேட்பாரற்று இருக்கும் சிலை.


இராஜாஜி பற்றி சில தலைவர்கள் சொன்னது.. 'இராஜாஜி' புத்தகத்திலிருந்து.. (source: FB)
                           When Rajaji was to take oath of office as the First Governor General major presses carried cartoons how Rajaji will be dressed up for the occassion. But to everyone's surprise he came in his usual PANCHAKACHAM, shirt and Uthriyam. 

“….. When intelligence matures and lodges securely in the mind, it becomes wisdom. When wisdom is integrated with life and issues out in action, it becomes bhakti (devotion). Knowledge, when it becomes fully mature is bhakti. If it does not get transformed into bhakti, such knowledge is useless tinsel. To believe that gynana and bhakthi, knowledge and devotion are different from each other is ignorance…” -- Rajaji


'He is an acknowledged leader of our country and a great and a wise statesman. It is our Good fortune that, in a period of crisis, we have one on whom we can rely for advice and counsel" so said the Iron man of India Sardar Patel.


'He thinks at least six months ahead of me; Keeper of my conscience' expressed Mahatma Gandhi


'His faith in Mahatma was tremondous but he never allowed his mind to slip away. whatever happened he came to his own conclusion.that is the type of keen mind, the mind of a person of highest integrity and self sacrifice, that I say, is an invaluable asset to a nation' exclaims Nehru


'His impact on me has been one of the civilising influence since I became President' adorned Kennady. 


Mr. Rajagopalachari was one of the makers of new India, a sincere patriot, a man whose penetrating intellect and moral sense added depth to national affairs. His analysis, his anticipation, his administrative acumen and his courage to steer an unpopular course if he felt the need, marked him as a statesman and made an impact on the national history at several crucial junctures. He had held the highest positions and lent distinction to every office. - Indira Gandhi.
















****வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்!!****