Thursday, March 20, 2014

திரளி புணருத்தாரண கைங்கர்யம் - Thirali Kovil punaruththArana kainkaryam

திரளி ஸ்ரீ பூமி நீளா ஸமேத திருவேங்கடமுடையான்-ஸ்ரீ ஸ்ரீனிவாசன் ஸந்நிதி புணருத்தாரண கைங்கர்யம்!

श्रीमते श्री अलर्मेल्मङ्गा नायिका समेत श्री श्रीनिवास परब्रह्मणे नमः ॥ 


அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உரைமார்பா *

நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே *

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே *

புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே *(திருவாய்மொழி -6-10-10 )



ஸ்ரீய: பதியாய், அவாப்த ஸமஸ்த லக்ஷ்மிகரமாய், உயர்வற உயர்நலம் உடையவனாய், சௌந்தர்யாதி விசிஷ்டமான நித்ய மங்கள விக்ரஹயுக்தனாய், ஸ்ரீ லக்ஷ்மி பூமி நீளா நாயகனாய், வைகுண்ட நிலையனாய் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனான ஸ்ரீமந் நாராயாணன், ஸம்ஸாரிகளாகிற நம்போன்ற ஜீவாத்மாக்களின் உஜ்ஜீவிக்கைக்காக, ' எய்துமவர்க்கு இந்நிலத்தில் அச்சாவதாரம் எளிது' என்கிறாப்போலே, மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களின் அமுதத்திருவாய் மலர்ந்த ஈரத்தமிழின் அருளிச்செயல் மங்களாஸாசனத்தாலே சந்தோஷித்து
ஸ்ரீ வைஷ்ணவத் திருப்பதிகள்தோறும் எழுந்தருளியதோடு மட்டுமன்றி,'வணங்கும் துறைகள் பலபலவாகி' என்றபடி பகவத் பாகவதோத்தமர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ ஸ்தலங்களில் ஒன்றானதும், 'எம்பெருமானையே தஞ்சமாகவும்', 'உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய்  கொண்ட குணாநுபவ கைங்கர்யங்களே பொழுதுபோக்காக'வும் கொண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளாக எழுந்தருளியிருந்ததும், 'ஞானம் அனுட்டானம் நன்றாகவே உடையானான' ஆச்சார்ய மஹோததர்களால் மங்களாஸாசனம் செய்யப்பட்டதும், ஆழ்வார்கள் உகந்த நான்கு திவ்ய தேசங்களுக்கு மத்தியில் அமையப்பெற்றதுமான திரளி ஸ்ரீவைஷ்ணவ க்ராமத்தில், எழுந்தருளி ஸர்வ மங்களங்களையும் அனுக்ரஹிக்கும் திருவேங்கடமுடையான் ஸந்நிதி-விமான மண்டபங்கள், இராஜகோபுரம், 'சுந்தரத்தோளுடையான்'  ஸ்ரீ இராமர் ஸந்நிதி, கருடாழ்வார் ஸந்நிதி, 'ப்ரபன்ன ஜன கூடஸ்தரான' ஸ்வாமி நம்மாழ்வார், 'தரிசன ஸ்தாபகரான' எம்பெருமானார், 'மன்னுபுகழ் சேர்' மணவாள மாமுனிகள் ஸந்நிதிகளுக்குப் புணருத்தாரண கைங்கர்யங்கள் எம்பெருமான் திருவுள்ளம் பற்றியபடி மிகவும் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அடியேன் இரு தினங்களுக்கு முன்பு தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.

*********************************************************************************
2008






*******************************************************************************
2014





பெருமாள் ஸந்நிதி  (பாலாலையமான பிறகு)


ஏக தள விமானம்






உடையவர்-1000 (2017-சித்திரை-திருவாதிரை) வருஷத்திற்க்காக புதிதாக நிர்மாணிக்கப்படும் 'உடையவர் வாசல்'