Sunday, November 30, 2014

Thanksgiving - சமூகப் பணி

அடையாள சமூகப் பணி

                     "புறம் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை
                      வாய்மையான் காணப் படும்."

                                    'Knowledge is Power'

                                  சென்ற வியாழன் (27/11) ஒரு வித்யாசமான ஆனால் எதிர்பார்த்த அனுபவம்.. சமூக சேவை என்ற பேரில் ஒவ்வொரு IT Companyயும் வருசத்துக்கு ஒரு நாள் (!), 7-8 மணி நேரம் ஏதாவது பண்ண try பண்ணும்.. இன்னிக்கு நம்ப கம்பெனி., அதற்குத் தேர்ந்தெடுக்கும் நாள் US-Thanks Giving Day. அப்போ ஒருநாள் சமூகப் பணி.. நல்ல concept.. எங்களுக்கு 'செம்மஞ்சேரி' கிராமம் ஒதுக்கப்பட்டது.. சுற்றிலும் வளைத்து, வளைத்துக் கட்டப்பட்ட பிரம்மாண்ட அடுக்ககங்களுக்கு (Multi store Appartments) நடுவே 4-5 வீதியோடு ஒரு ஊர்.. மக்கள் பொருளாதாரத்திலும், முன்னேற்றத்திலும் கொஞ்சம் பின்தங்கித் தான் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட சுனாமி குடியிருப்பு போல இருந்தாலும், அரசு வீட்டு வசதி வாரிய வீடுகள் அசுர வளர்ச்சியோடு இருந்தது..  ஆனால் தரமான சாலைகள், இப்போது பெய்த மழைக்குக் கூட நன்றாக இருந்தது.. நகரத்தின் வாசனை கொஞ்சமும் இல்லாத இடம்.. 10-15 வருஷம் பின்னால் தான் இருந்தது.. ஆனாலும், 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்றபடி, டாஸ்மாக்க்கு இந்த இடமும் விதிவிலக்கில்லை போல.. நல்ல 'குடிமகன்களை' தெருவில், காலை வேலையிலிருந்தே பார்க்க முடிந்தது.. குகன் வம்சத்தார் போலத் தான் இருந்தார்கள் நிறைய இடங்களில்.. சரி, விஷயத்துக்கு வரேன்..

                                   நம்ப IT ஆட்கள் களப்பணிக்கு வந்தா எப்படி இருக்கும்ன்னு பாக்கறதும், சிரிப்பொலி, ஆத்தியா சேனல் பாக்கறதும் ஒன்னு.. நடுவுல கொஞ்சம் டென்ஷன் ஆகலாம்.. எதுவுமே செய்யாம எல்லாம் செஞ்ச மாதிரி கட்டறது, குரூப் போட்டோ, செல்பி போட்டோ, அந்த நிமிஷமே முகநூல் அப்டேட்.. ஆத்தாடி.. முடியலைடா சாமி..!!! ஆனாலும் நல்ல உள்ளம் கொண்ட கொஞ்ச பேரு, ரொம்ப interestக வேல செஞ்சத பாக்க முடிஞ்சது.. 'விடியக்காலை'  (ITய பொருத்தமட்டில்) 9 மணிக்கு, எங்க ஊரு பக்கம் மில் வேலைக்கு ஆள் கூப்பிட்டு போற மாதிரி ஒரு vanல பயணம்.. நான் எஸ்கேப்..1 மணி நேரம் தாமதமாகத்தான் போக முடிந்தது.. அதுக்குள்ளே எதிர் பார்த்த படி ஒன்னும் நடக்கல.. 10-10:30 ஒரு அரை மைல் தூரம் நடை, அது தான் 'walkathan'-வாக்கதான்..:).. இதுனால வந்த களைப்பு (!!) தீர எல்லாருக்கும் Snacks-Soft Drinks.. (அடப்பாவிங்களா, அவனவன் காடு-மேடு எல்லாம் சுத்தி வேல பார்த்தாலுமே 4 மணி நேரம் கழிச்சு தான் கூழ் குடிப்பான்.. ஹ்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கில்ல)..

                                     சரி - ஊற சுத்தப்படுத்தலாம்னா, அங்க தான் பெரிய பல்பு.. (இது போலவே 4 வருஷம் மின்ன மெரினா கடல்கரைக்குச் சுத்தம் செய்யப்போன போது, corporation பணியாளர்கள் விடியற்காலையிலேயே சுத்தம் செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்). இது சென்னை இல்லாததால், எங்குமே குப்பை அவ்வளவாக இல்லை.. வழக்கம் போல பெயிண்ட்டு டப்பா எடுத்துக்கிட்டு ஸ்கூல் பக்கம் போகலாம்ன்னு ஒரு கூட்டம் போக, நானும், நண்பர்கள் சரவணன், இராமும் சேர்ந்து கொண்டோம்..பசங்களப் பார்த்த மாதிரியும் இருக்கும்ன்னு ஒரு எண்ணம்..Teammate விஜய் பொறுப்பில் எங்க team ஒரு 10 பேர்கள் பள்ளி நோக்கிக் கிளம்பினோம்.. மற்றெல்லாரும் சேர்த்து ஒரு 30 பேர்.. (Photos: Venkat & Ram)



                                                அது ஒரு அரசுப் பள்ளி- தற்போது 11 வகுப்பு வரை செயல்படும் இடம்.. மொத்தமாக 5-6 வகுப்புகள் தான் அங்கு இருந்தது.. மாணவர்களுக்கு ஒரே குஷி.. அங்க ஏதோ திருவிழா போல எல்லாரும் ஓடிவந்தார்கள்..  என்ன செய்யப் போறோம்னு தெரியாமலேயே ஒரு 1 மணி நேரம் போனது.. அப்புறம் நம்ப கிரிக்கெட் மேட்ச் மாதிரி எல்லாரும் வட்டமா நின்னு ஒரு 10 நிமிஷம் Planning.. ஏன்னா ITல Planning தான் முக்கியம், அப்பரம் Implementation, Delivery, Support இத்யாதிகள்... காலக்ரமத்தில் (1-1:30 மணி நேரம் கழித்து)  பெயிண்ட் அடிக்க ஒரு கூட்டம் புறப்பட்டது..அவர்களுக்கு உதவி செய்யா 10-15 பள்ளி மாணவர்கள்..

                                              நடுவே நான் ஹெட் மாஸ்டர பார்க்க, அவர் ரூம்ல இருந்த ஒரு சிறு அலமாரி தான் 'லைப்ரரி'ன்னு காண்பித்தார்.. நாங்க என்ன பண்றதுன்னு தெரியாம நிக்க, அவரே +1 Classல ஏதாவது பேசச் சொன்னார்.. சரவணனும், நானும் ஒரு 30 நிமிஷம் பேசினோம்.. 'தொட்டனைத் தூறும்' என்ற குறளோடு ஆரம்பித்தேன்.. மாணவர்களும் கூடச்சேர்ந்து  குறளைச் சொன்னார்கள்.. அவர்கள் நல்ல வழியில் தான் செல்கிறார்கள்.. ராம் தன் பங்கிற்கு 1-2 வார்த்தைகள் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னான்.. 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்' என்பது அந்த வகுப்பு ஆசிரியருக்குச் சாலப் பொருந்தும்.. மாணவர்கள் கொஞ்சம் கட்டுப்படுத்த முடியாத வகையில் தான் இருந்தனர், இராம் அடிக்கடி பயந்தபடி நெளிந்ததைப் பார்க்க முடிந்தது.. மாணவிகள் வழக்கம் போல ஆர்வமாகக் கேட்டதோடு இல்லாமல், தங்களின் சந்தேகங்களையும் கேட்டனர்.. கொஞ்சம் மன நிறைவாக இருந்தது எங்களின் முதல் மீட்டிங்.. எங்களோடு வந்த என்னோட teammates 4-5 பேர் பக்கத்து வகுப்புகளில் 'Good & Bad Habits' (Google துணையோடு தயாரித்ததை வைத்துக் கொண்டு) என்ற பொருளில் 2-5 வகுப்பு மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.

                                             அலுவல வேலை காரணமாக இராம் என்னை கொஞ்சம் அவசப்படுத்த ஆபீஸ் புறப்பட உத்தேசித்தேன்.. (மேனேஜர் அவனை குச்சியை வைத்து விரட்டாத குறை தான்;ஆனால் அதுவும் நடந்தது செல்லமாக :) ).. Lunch தான் கொஞ்சம் என் மனதைப் பிழிந்தது.. IT-Corporate-MNC இத்யாதி போர்வைகளுடன் சமூகப் பணி செய்யப் போன எங்களுக்கு உயர் தர உணவகத்திலிருந்து VEG உணவு, Mineral water bottle.. அந்த மாணவர்கள் எல்லாம் வரிசையில் நின்று அரசு சத்துணவு வாங்கி சாப்பிட்டனர்.. என் அலுவலக நண்பர்கள் குழாயில் கை அலம்பியவர்கள் வெகு சிலரே, மற்றெல்லாரும் Mineral Water Bottel தான்.. இது போன்ற சில கனத்த மனதோடு அலுவலகம் திரும்பினேன் இராமோடு, என் Onsite roommate சரவணனிடம் ஒரு bye சொல்லிவிட்டு!...நாங்கள் மதியம் ஒரு 2 மணிக்குக் கிளம்பும் வரை பெயிண்ட் ஈரம் பாதிச் சுவருக்கு மேலத் தாண்டவில்லை.. அதற்குள் கிரிக்கெட், கோ-கோ என்று ஆரம்பித்துவிட்டனர்.. எதுலயுமே சேராத எங்கள் டீம் மட்டும் என்ன செயாலம்ன்னு யோசித்துக் கொண்டிருந்தது..

சில விஷயம் கவனிக்க வேண்டி இருந்தது..

* சரியான பணியை சரியான இடத்துல செய்யனும்.. குப்பையே இல்லாத இடத்தில் எங்க குப்பை அள்றது..:)
* சரியான திட்டமிடனும்.. நாங்களும் போறோம் ஒரு நாள்ன்னு போகத்தேவை இல்லை.. இதுல எல்லாம் நெறைய interest இருக்கறவங்களை மட்டும் கூப்பிட்டு போனால் போதும்..
* எல்லா வேலையும் ஒரே நாள்ல செய்ய முடியாது.. அரை மணிநேரம் செஞ்சாலும் உருப்படியா செஞ்சா போதும்..
* மேலும், போற இடத்துக்கு ஏற்ற மாதிரி மாற மனசு இருக்கணும்..நம்ப செலவையும், ஆடம்பரத்தையும் ஒரு நாளாவது குறைச்சுண்டு சமூக சேவையில் அக்கறை செலுத்தலாம்.
* ரொம்ப முக்கியமா - Group, Selfie Photo எடுத்து உடனே FBல upload செஞ்சா அப்பறம் போற வேலைய எங்க பாக்கறது..

                           நான் போன இடத்துல மேல சொன்ன எல்லாம் இருந்தது.. இதுவும் ப்ராஜெக்ட் execute பண்ற மாதிரி தான் .. கிட்டத்தட்ட அந்த ஒரு நாளோடு இதற்கும் மூடு விழா கொண்டாடப்பட்டு விடும்..இவை எல்லாம் என்னோட கண்ணோட்டம் (prespective). இதில் வந்த பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்கும். இவ்வளவு வேலைப் பளுவிலும் ஒரு நாள் சமூகப் பணி பற்றி யோசிப்பதே சிலருக்குக் கடினம். இந்த முயற்சி வரவேற்கத்தக்கது

                                அந்த வகுப்பு மாணவர்களின் கோரிக்கை -  ஒரு வாலி பால், பெஞ்ச், கொஞ்சம் Spoken English Class.. நாங்களும் உரியவர்களிடம் இதச் சொல்லி வந்தோம்..எங்களால் முடிந்ததை செய்வதாக மனதளவில் உறுதி தந்தோம். பார்க்கலாம், பயணம் தொடருமா என்று!..மேலும் சில டீம் மது பற்றிய விழிப்புணர்வு, மருத்துவ முகாம் என்றெல்லாம் சென்றார்கள். அங்கு என்ன நடந்ததுன்னு தெரியல. மொத்தத்தில் இது ஒவ்வொரு வருடமும் நல்ல initiative.. பட் அந்த நாளோடு அது முடிந்துவிடுவது போலத் தான் இருக்கிறது.. இதற்க்கு எந்த IT கம்பன்யும் விதிவிலக்கல்ல!

                         மேற்ச்சொன்ன குறளும், பொன்மொழியும் வகுப்பறையில் எழுதப்பட்டிருந்தது.. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல!