Monday, July 15, 2013

TCEயில் தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் - பாரதி

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. அண்மையில் படித்தது-உண்மைத் தன்மை தெரியாது.
"ஆங்கிலம் வணிகத்தின் மொழி
இலத்தீன் சட்டத்தின் மொழி.
கிரேக்கம் இசையின் மொழி
ஜெர்மன் தத்துவத்தின் மொழி
பிரஞ்சு தூதின் மொழி
இத்தாலி காதலின் மொழி"
                    என்னைப் பொறுத்தவரை தமிழுக்கு அப்படி வரையறை செய்ய முடியாது.வரையறுக்க முடியாத பண்புகளைப் போதிக்கும் மொழி.மொழியையும், அதை நன்கு கற்பவர்களையும் இழந்து வருகிறோம்.  மொழி சம்பந்தப்பட்ட அனுபவம்- கல்லூரிப் பருவத்தில்

                    நான் தியாகராஜர் பொறியியற்க் கல்லூரியில் ஒரு 6 வருஷம் படிச்சேன்.எனக்குத் தெரிந்தவரை எந்த பொறியியற்க் கல்லூரியிலும் தமிழ்க்கு தனி முக்கியத்துவம் இருக்காது. பிற மொழி மாணவர்கள் நிறைய படிக்கறதால அது சாத்தியாமும் இல்ல.வருசத்துக்கு தமிழை மையப்படுத்தி 3-4 பாடத் திட்டம் சாராப் பிறதுறைச் செயற்பாடுகள் மாதிரி வைக்கலாம். நாம கல்லூரிப் பாடமே அப்படித் தான் படிப்போம். சரி இருக்கட்டும். 2001 - நான் BSc Applied Sciences படிக்கும் போது A.P.J. அப்துல் கலாம் என் கல்லூரிக்கு உரையாற்ற வந்தார். அப்போது அவர் பிரதமரின் அறிவியல் ஆலோசகர்.



                   மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்  ஏதோ கருத்தரங்கு முடித்துவிட்டு  வந்ததாக ஞாபகம். கல்லூரி திருவிழாக் கோலம் தான். ஆங்காங்கு தோரணம்-பதாகை எல்லாம். 1 வாரத்துக்கு முன்னாடியே பசங்க எல்லாருக்கும் ஒரு வாய்மொழி ஆணை.அவர் கிட்ட என்ன என்ன கேள்வி கேட்கணும்ன்னு ஒரு பட்டியல் தயார் செய்யும்படி. யாரும் கேட்கலாம். அதில் ஒரு கட்டுப்பாடும் இல்ல. எனக்கு அந்தயளவுக்கு கேட்கற மாதிரி எந்த கேள்வியும் இல்ல. நானும், நண்பர் அன்பழகனும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினோம். ஏறத்தாழ   அனைவரும் வாங்கியிருப்பார்கள். 2 நாள் கழித்துத் தான் அது என் கை சேர்ந்தது. அத்தனை குவிந்திருந்தன. நிகழ்ச்சிக்கு வரேன்.
                      வரவேற்புரை முடிந்ததும் அவர் பேசவந்தார். 'நண்பர்களே உங்கள் எல்லாருக்கும் என் வணக்கம்' என்று தமிழில் கூறியதும் அரங்கத்தில் சலசலப்பு-நிற்காத கைதட்டல்கள்; இவர் தமிழில் பேசுகிறாரே என்று! அனைவரின் நிலை கண்டு வியந்தேன்.தமிழகத்தில் பிறந்து, தமிழில் கற்று, தமிழில் இரு வார்த்தைகள் பேசியதால் தான் இந்த வியப்பு;ஒருபுறம் கவலையுற்றேன்! நான் எப்படிப்பட்ட சமுதாயத்தில் இருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்.  கிட்டதட்ட 60-70% தமிழ் அறிந்த மாணவர்கள் தான்.இதே போன்றது நண்பரின் கல்லூரியிலும் நடந்ததாகக் கூறக் கேட்டேன்.

Monday, July 8, 2013

செய்யாதன செய்தோம்

 க்ருஹப்ரவேசம்:

ஏற்றகலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப, மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் , நீங்காத செல்வம் நிறைந்து!
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து; செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்!
                         இந்த வரிகள் 'திருப்பாவை' என்ற தமிழ் பக்தி இலக்கியத்தில் ஆண்டாள் பாடியது. 7-8ம் நூற்றாண்டு இல்ல அதுக்கும் முன்னாடி.  இதோடு தொடர்புடைய சம்பவம் தான் என்னை எழுதத் தூண்டியது. அண்மையில் நெல்லை கண்ணன் - 'யார் பாரதி' கேட்டேன். 'என்ன வளம் இல்லை நம் நாட்டில். எல்லாம் உண்டு. ஆனால் செயல்படுத்தும் இடத்தில் இருப்பவர்களும்- செயல்படுத்துபவர்களும் தான் மாற வேண்டும்" என்றார். உண்மை தான்.

                    நண்பர் ஒருவர், சென்னையில் ஒரு Software companyயில் பணிபுரிகிறார். 2-3 முறை Onsite எல்லாம் வெற்றிகரமாக முடித்து, ஓரளவு settle ஆகிவிட்டார்.இவரும் 1-2 கம்பெனி jump அடித்தவர் தான். அது எப்படியோ இருக்கட்டும், matterக்கு வரேன். அவ்வப்போது 'Gtalk Login'  பண்ணுவார்.மற்றவர்களைப் போல் தான், ping பண்ணவெல்லாம் மாட்டார். பெருசா விஷயம் இருக்காது. 2-3 மாதங்களுக்கு முன் சென்னை புறநகரில் ஏதோ ஒரு அடுக்ககத்தில் (apartment) ஒரு பகுதி இவர் வாங்கி இருப்பதாக வேறொரு நண்பர் சொன்னார். 2 வாரங்களுக்கு முன் Gtalkல் வந்தவர், அவரே வீடு வாங்கிய கதைய கொஞ்சம் சொன்னார். ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னை மிகவும் பாதித்தது/சிந்திக்க வைத்தது.
HDFC உதவியால் EMIல் வீடு வாங்கி இருக்கிறார். வீடு கட்டப்பட்ட பகுதி 10-15 வருடங்களுக்கு முன் 'வயலாக' இருந்திருக்கிறது. Real Estate மாபியக்களிடம் சிக்கி தற்போது அடுக்ககமாக மாறிவிட்டது. நண்பர் விசாரித்ததில் வந்த தகவல், முன்னர் வயலாக இருந்ததால் 40-50 அடியில் நல்ல தண்ணீர் வருவதாகவும், அருகில் காலியிடம் நிறைய இருப்பதால் காற்றோற்றமும் இருப்பதாகத் தெரிந்ததால் அங்கயே வாங்கிவிட்டார்.



                      க்ருஹப்ரவேசத்திற்க்கு நாள் பார்த்து, ஊரிலிருந்து அம்மா, அப்பா அனைவரும் வந்தனர். "க்ருஹப்ரவேசத்திற்க்கு பசு மாடும்-கன்றும் வேணும். ஹோமத்திற்கு முன்னாடி அது தான் முதல்ல போகணும். அது தான் சம்ப்ரதாயம். ஏதாவது ஏற்பாடு பண்ணுடா" ன்னு அவனுடைய அம்மா முதல் நாள் இரவு கூறியிருக்கிறார். நண்பர் எங்கு அலைந்தும் பசு மாடு-கன்று கெடைக்கவில்லை.அப்படியே வந்தாலும் எப்படி அடுக்ககத்து மாடியில் அதை ஏற்றுவது:(.  "இப்போ எல்லாம் நிஜ பசு மாடு கொண்டுவர காலம் எல்லாம் போச்சு. GRTல வெள்ளிலையே பசு மாடு-கன்னு விக்கறா. வாங்கிண்டு வந்துரு" - இது அவரின் உறவினர் சென்னைவாசி கொடுத்த அனுபவ அட்வைஸ். அதன்படியே  வெள்ளியில் வாங்கி மாட்டுப்பெண் (அதாவது அவரின் மனைவி-சரியான பேரு தான் ) கையில் கொடுத்து க்ருஹப்ரவேசம் செய்துவிட்டதாகக் கூறினார். (அந்தப் புகைப்படத்தை அனுப்புவதாகக் கூறியிருக்கிறார்). வாழ்த்துக்கள் கூறினேன். 
நாம் எங்கே செல்கிறோம் என்று கூடத் தெரியவில்லை. முன்னர் சொன்ன திருப்பாவை வரிகளைப் படித்தேன். வள்ளல் பெரும் பசுக்கள் இருந்த நாடு. இப்போது வெள்ளியில் சிலை செய்து அதை வழிபடுகிறோம். கொஞ்சம்-கொஞ்சமாய்த் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். 

'இது தான் மலை இருந்த இடம்-ஆறு ஓடிய இடம்-குளம்-ஓடை இருந்த இடம்'  -- இவை தான் நாம் அடுத்த Generationகிட்ட சொல்லப்போற வாசகம். :(.