இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் நிறைந்திருப்பவர். சாதி-மதம் என்று வெற்று அரசியல் பேசும் இன்றைய அரசியலார் முன், இரண்டையும் ஒழித்து வாழ்ந்து காட்டியவர். 'கலப்பு மனம்' என்று மேடையில் மட்டும் பேசாமல், தன் வீட்டிலேயே அதைத் தொடங்கியவர். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், ஆலயப் பிரவேசம், கள்ளுக்கடை எதிர்ப்பு இன்னும் பல, நமக்காகவே!. 'அவா' என்று தூற்றியவர்க்கும் அரசியல் அடையாளம் கொடுத்தவர்! அவரின் 'குலக் கல்வி', ஹிந்தி ஆதரவு இது போன்றவற்றை நாம் மதிக்காததால் தான் இன்றும் பின்தங்கி உள்ளோம் என்பது என் அனுபவப்பூர்வ உண்மை! மற்ற தலைவர்களின் சிலைகளைச் சாதிச் சங்கங்களும், கொள்கைகளை அரசியல் கட்சிகள் வெற்றுக் கோஷங்களுக்காகப் பராமரித்தாலும், இவரின் கொள்கைகளையும்-சிலைகளும் யாராலும் பேணப்படாமல் உள்ளது..காங்கிரசே மறந்தாலும், பிஜேபி இன்று நினைத்தது கொஞ்சம் மகிழ்ச்சி!
வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன் என்ற இரண்டு புத்தக இரத்தினங்களைக் கொடுத்தவர். "சக்ரவர்த்தி திருமகன்" காப்பியத்திற்காக 1958ம் ஆண்டு "சாகித்ய அகாடமி" விருது வழங்கப் பட்டது. இராகமாலிகை, MS குரலில் அவரின் 'குறை ஒன்றும் இல்லை' அவரின் மற்றுமொரு இரத்தினம்! இவர் கல்கி மற்றும் இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். பிறந்த நாள் கொண்டாடும் நடிகரை போற்றும் அனைவரும் நமக்காகவே வாழ்ந்த இந்த மாமனிதர் (இன்று 10/12), நாளை மற்றுமொரு யுக புருஷரையும் (12/11) கொஞ்சமாவது நினைக்க வேண்டும் என்று கூறும் நிலையில் தான் உள்ளோம்!
(தொண்டர்களோடு ஒருவராக, காலில் காயத்திற்கான கட்டுடன்-மக்கள் சேவையில்)
குமரி மாவட்டம் விடுதலை போரில் இராஜாஜியின் பங்கு (Tamil Wikipedia):
தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜி அவர்களிடம் அலோசனை கலரும் படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவர் காமராசை நம்பாமல், இராஜாஜியை நம்பினார். அவரை சந்தித்த ரசாக: “இது விஷயமாக நான் முதலில் சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் ஒன்று தான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்”.திரு. காமராசரால் தீர்வுகாண இயலாத நிலையில், ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: “திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வழக்கறிஞர் தைக்காடு திரு. சுப்பமைணிய ஐயரைத் தொடர்பு கொண்டு, இராஜாஜியின் அறிவுரையையும் அதன் மீது தங்களது முடிவும் அறிவிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைச் சட்டம் 527 (C.R.P.C) –ன் அடிபபடையில் திரு – கொச்சியில் நடந்து வருகின்ற பதினொரு வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கள்ளுக்கடை எதிர்ப்பு:
சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி இருந்த போது மது கடைகளை மூடும் சட்டத்தை கொண்டு வந்தார், அதை பெரியார் மிக கடுமையாக எதிர்த்தார் ராஜாஜி மேல் ஜாதிக்காரர், கீழ்ஜாதிகாரர்களின் கஷ்டமும் தொழிலாளர்களின் சிரமமும் அவருக்கு தெரியவே தெரியாது, உழைத்து உடல் வலியில் இருப்பவன் ஒரு கிளாஸ் தண்ணி போட்டால் தான் அசைந்து உறங்க முடியும், எனவே உடனடியாக சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றார் பெரியார்.
அதற்கு ராஜாஜி என்ன பதில் சொன்னார் தெரியுமா? மது விலக்கு சட்டத்தை அமலபடுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்குமோ? பெருவாரியான மக்கள் அதை ஏற்க மாட்டார்களோ? என்று எல்லாம் எண்ணி பயப்பட்டேன், ஆனால் நண்பர் ஈ.வெ,ரா இந்த சட்டத்தை எதிர்ப்பதிலிருந்தே இதை மிக சுலபமாக அமுல் செய்துவிட முடியும், எல்லா மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதை புரிந்து கொண்டேன், ஏன்என்றால் பத்து பேர் ஏற்று கொள்வதை, பத்து பேருக்கு சரியெனப் பட்டதை பெரியார் தவறு என்பார், ஏற்று கொள்ளவும் மாட்டார் என்பது தான் ராஜாஜியின் பதில்.
உண்மையில் பெரியார் ராஜாஜியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மதுவிலக்கு சட்டத்தை எதிர்த்தார்.ஆனால் பெரியாரின் வாரிசுகள் என்று தங்களை அழைத்து கொள்ளும் கழக கண்மணிகள் தான் 1967-ல் மதுகடைகளை திறந்து வைத்தார்கள்.
வியாசர் விருந்து (எங்கோ படித்த நிகழ்ச்சி):
வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ என்னும் காப்பியத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரால், எளிய தமிழ்நடையில் ராஜாஜி எழுதி, அந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி வீதியில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு தேவர் திடீரென வந்தார். அவருக்கு உரிய பாணியில் 'வியாசர் விருந்து' பற்றிப் பேசினார். சில வரிகள் - ' இந்தக் கண்ணுக்குப் பார்வை கிடையாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்பொழுது சொப்பனத்தில் பார்வைகள் நடைபெறுகின்றன என்றால் அதைப் பார்ப்பதுதான் அகக்கண். அதைப் பார்ப்பதுதான் மனக்கண் என்பதை யோகிகளும் ஞானிகளும் கண்டார்கள். இதைக் கருமிகள் நித்திரையிலே அனுபவிக்கிறார்கள். அந்தக் கண் கிடைத்தது வியாசருக்கு. அதைக் கொண்டு எழுதினார் இந்த புத்தகத்தை என்பதுதான் அடியேன் இன்றைக்குச் சொல்ல வேண்டுவதாகும். அந்த நிலைமையில் அந்தத் தன்மையில் உயர்ந்து நின்றதுதான் இந்த பாரதம். அப்பாரதத்துக்குள்ளே பெருமணியாகக் கிடைத்ததுதான் இந்த பகவத் கீதை. எனவே வியாசர் முனிவர் எழுதிய மகாபாரதம் என்பதை ‘வியாசர் விருந்து’ என்பதன் பெயரால் ராஜாஜி அவர்கள் எழுதி வழங்கி உள்ளார்கள். அதனை வாங்கிப் படித்து பயனடைவது நமது கடமை'
AIRல்.,
மூதறிஞர் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை!தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர் ராஜாஜி. "இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல்" என்ற பெருமைக்கு உரியவர். "என் மனச்சாட்சியின் காவலர்" என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்டவர்.
ஆம்! அவர் சாதித் தலைவரில்லை; சாதித்த தலைவர்!
வெகு சில இடங்களில் மட்டுமே அவர்க்குச் சிலை இருக்கும், அதில் ஒன்று எங்கள் ஊர் - திருமங்கலம், மதுரை. இன்றும் கேட்பாரற்று இருக்கும் சிலை.
இராஜாஜி பற்றி சில தலைவர்கள் சொன்னது.. 'இராஜாஜி' புத்தகத்திலிருந்து.. (source: FB)
When Rajaji was to take oath of office as the First Governor General major presses carried cartoons how Rajaji will be dressed up for the occassion. But to everyone's surprise he came in his usual PANCHAKACHAM, shirt and Uthriyam.
“….. When intelligence matures and lodges securely in the mind, it becomes wisdom. When wisdom is integrated with life and issues out in action, it becomes bhakti (devotion). Knowledge, when it becomes fully mature is bhakti. If it does not get transformed into bhakti, such knowledge is useless tinsel. To believe that gynana and bhakthi, knowledge and devotion are different from each other is ignorance…” -- Rajaji
'He is an acknowledged leader of our country and a great and a wise statesman. It is our Good fortune that, in a period of crisis, we have one on whom we can rely for advice and counsel" so said the Iron man of India Sardar Patel.
'He thinks at least six months ahead of me; Keeper of my conscience' expressed Mahatma Gandhi
'His faith in Mahatma was tremondous but he never allowed his mind to slip away. whatever happened he came to his own conclusion.that is the type of keen mind, the mind of a person of highest integrity and self sacrifice, that I say, is an invaluable asset to a nation' exclaims Nehru
'His impact on me has been one of the civilising influence since I became President' adorned Kennady.
Mr. Rajagopalachari was one of the makers of new India, a sincere patriot, a man whose penetrating intellect and moral sense added depth to national affairs. His analysis, his anticipation, his administrative acumen and his courage to steer an unpopular course if he felt the need, marked him as a statesman and made an impact on the national history at several crucial junctures. He had held the highest positions and lent distinction to every office. - Indira Gandhi.
****வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்!!****
No comments:
Post a Comment