ஆறு, குளம் இந்தமாதிரி நீர் நிலைகளுக்கு காலையிலேயே சென்று சென்றுவிடுவர். 'batch by batch' நடக்கும் . கிட்டத்தட்ட 10-11 வரை கூட நடக்கும். 'எல்லாரும் வந்துட்டா. தலை ஆவணி அவிட்ட பசங்க எல்லாம் அரசக் குச்சியோட வாரா. ஆலாத்தி கரைச்சு வைக்கணும்' என்று சொல்லிக்கொண்டே ஆரத்தி கரைத்து வைத்து நாங்கள் வந்ததுடன் எடுத்து வாசலில் கோலத்தின் நடுவே சேர்ப்பர்.
வைகைக் கரையில் முதல் உபகர்மா செய்த அனுபவம் இன்னும் கண்களின் முன்னால். வைகை நிறைய தண்ணீர். அப்போது நான் முடிக்க மட்டும் 10 மணி ஆகிவிட்டது. சூரியன் உதயமாகி 1.5 நாழிகை ஆனா பிறகு தான் துவங்க வேண்டுமென்று அப்போது படித்ததை பள்ளியில் அடுத்த வருடம் லீவ் வாங்கும் போது பயன் படுத்த வேண்டியதாகிவிட்டது. இன்று (2 நாளும்) யாரும் அந்த வைகை பக்கம் கூட போகல. வைகையிலும் தண்ணீர் இல்லை, யாருக்கும் அவ்வளவு நேரம் இல்லை.:(.
1-2 முறை குளக்கரையில் செய்த அனுபவம். USல் 2 ஆவணி அவிட்டம் செய்தாகிவிட்டது. சென்னைக்கும் இதற்கும் ஒரு வேறுபாடுமில்லை. Batch ஆகா யாரும் காத்திருக்கப் போவதில்லை, வாசலில் ஆரத்தி சேர்க்கப் போவதில்லை. நான் பயன்படுத்திய புத்தகத்தில் நீர் நிலைகளில் நீராடி என்று அடிக்கடி இருந்தது. கொஞ்சம் பழைய புத்தகம் தான். அந்தக் காலத்தில் (10-15 வருஷம்) இது எல்லாம் இருந்திருக்கும். இயற்கையைத் தொலைத்து வாழக்கையைச் செயற்கையாய் மாற்றி வருகிறோம். பொறுமை, அனுசரித்துப் போறது இது மாதிரி பல விஷயங்கள் இது போல ஊர் கூடி கொண்டாரதல விஷேசங்களில் கத்துக்கலாம். நாம் தான் பக்கத்து வீட்டில் இருப்பவரைக் கூட அறியாமல் இருக்கிறோம். சரி.
முன்னோர்கள் வேதத்தில் கண்டுபிக்காதது எதுவும் இல்லை. இன்றைய அறிவியலின் மூலம். சின்ன sample - இன்று செய்த சங்கல்பத்தில். பூமியில் எத்தனை கண்டங்கள் இருந்தன என்ற பலவற்றைப் பின்வரும் வேத வரிகள் கூறுகின்றன.
"அத்³ய ப்³ரஹ்மண: த்³விதீயபரார்தே,ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஷ்டாவிம்ʼஸ²திதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³ ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரதக்கண்டே மேரோஹோ, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்,ப்ரபவாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா: ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்யே விஜய நாம ஸம்வத்ஸரே..."
சங்கல்பத்தில் எந்த கால கட்டத்தில், எந்த இடத்தில் இருந்து கொண்டு எதற்காக பூஜை செய்கிறோம் என்று தெளிவாக நினைவுறுத்திக் கொள்கிறோம்.
இந்த உலகை ஸ்ருஷ்டித்து இரண்டு பரார்த்தகாலம் இருப்பவர் ப்ரஹ்மா. தற்போதுள்ள ப்ரம்ஹாவின் இரண்டாம் பரா வில் என்பது அத்³ய ப்³ரஹ்மண: த்³விதீயபரார்தே.
ஸ்வேத வராஹ கல்பே - க்ருஷ்ண வராஹ கல்பம், ஸ்வேத வராஹ கல்பம் இரண்டில் இப்போது இருப்பது ஸ்வேத வராஹ கல்பம்.
வைவஸ்வதமன்வந்தரே - இப்போது ஆட்சி செய்யும் 7வது மனு வைவஸ்வத மனு (ஸ்வாயம்புவர்,ஸ்வாரோசிஷர்,உத்தமர்,தாமஸர், ரைவதர் ,சாக்ஷஷர், வைவஸ்வதர், ஸாவர்ணி ,தக்ஷஸாவர்ணி, ப்ரஹ்மஸாவர்ணி, தர்மஸாவர்ணி, ருத்ரஸாவர்ணி, ரௌச்யர் ,பௌத்யர் முதலிய 14 மனுக்கள்)
(அஷ்டாவிம்ʼஸ²திதமே) கலியுகே³ ப்ரத²மே பாதே³ - 28வது கலியுகத்தின் முதல் கால் பகுதி
ஜம்பூ த்வீபே - பூலோகம் ஏழு த்வீபங்கள் கொண்டது. ஜம்பு த்வீபம் எனச்சொல்லப்படும் த்வீபத்தில் இருக்கிறோம்.(ஜம்பூ, ப்ளக்ஷ, புஷ்கர, குஸ, க்ரௌஞ்ச, சக, ஸால்மல)
பாரத வர்ஷே - ஜம்பூத்வீபம் 9 தீவுகளால் ஆனது -பாரதம், கிம்புருஷம், ஹரி, இலாவ்ருதம், ரம்யகம், ஹிரண்மயம், குரு, பத்ராஶ்வம், கேதுமாலம் (இந்தியா, இமயமலைப்பகுதி, அரேபியா, திபேத், ரஷ்யா, மஞ்சூரியா, மங்கோலியா, சைனா, துருக்கி என்றும் கூறுவார்)
பரதக்கண்டே மேரோஹோ, - பாரத வர்ஷத்தில் இந்த்ர, சேரு, தாம்ர, கபஸ்தி, நாக, ஸௌம்ய, கந்தர்வ, சாரண, பாரத என்ற ஒன்பது கண்டங்களின் (பிரதேசங்களின்) இடையே பரத கண்டத்தில் இருக்கிறோம்.
இவைதாம் அந்த சங்கல்பத்தில் சொல்வது. துல்லியமாக நாம் எங்கு இருக்கிறோம், எந்த காலத்தில் இருக்கிறோம் என்று satellite உதவியே இல்லாமல் , பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டே வேதத்தில் சொல்லிவிட்டனர்.
இந்த பூமி முழுதும் பாரதத்தின் ஒரு பகுதி தான். ஆதனால் USலும் - பாரத வர்ஷே பரதக்கண்டே தான்!. இது பற்றி விஷ்ணு புராணம்
उत्तरं यत्समुद्रस्य हिमाद्रेश्चैव दक्षिणम् ।
वर्षं तद् भारतं नाम भारती यत्र संततिः ।।
uttaraṃ yatsamudrasya himādreścaiva dakṣiṇam
varṣaṃ tadbhārataṃ nāma bhāratī yatra santatiḥ
"The country (varṣam) that lies north of the ocean and south of the snowy mountains is called Bhāratam; there dwell the descendants of Bharata." (Thanks to Srinivasan Ramasubramanian for sharing VishnuPuranam quotes)
நிறைவோடு உபகர்மா, ஜெபம் முடித்தேன். வாசலில் நின்னு ஆரத்தி எடுத்துக்கோடான்னு அம்மா phoneல் சொன்னார். சிரித்துக்கொண்டே சரி என்றேன்.
No comments:
Post a Comment