04/22 - மீனாட்சி திருத்தேர் - சித்திரை மாசம் ஏன் மாசி வீதியில் தேர்??
பொ.யு.1630-லிருந்து மதுரையில் தங்கி நாயக்கர் நிறைய கோவில் திருப்பணிகள் செய்யத் தொடங்கினார்.
மதுரையில் இன்னொரு சிறப்பு என்னன்னா, கோவிலைச் சுற்றி இருக்கற வீதிகள் எல்லாம் தமிழ் மாதத்தின் பேர்ல இருக்கும். ஆடி வீதி,சித்திரை வீதி,ஆவணி மூல வீதி, மாசி வீதின்னு தான் இருக்கும். இது அந்தந்த மாதங்களில் நடக்கும் மீனாட்சி கோவில் திருவிழாவோட சம்பந்தபட்டதா இருக்கும்.உதாரணமா ஆவணி மூல திருவிழா ஆவணி மூல வீதிகளில் தான் நடக்கும்.
சரி, இப்போ பேக் டு நாயக்கர் காலம்.. அப்போ மீனாட்சி கோவில் தேர் சரியா இல்லாததால புதுசா தேர் செஞ்சாரு. மதுரைல எப்பவுமே மீனாட்சி-சொக்கநாதர், பிரியாவிடைன்னு வாகன புறப்பாடும் தனியா தான் நடக்கும். அதனால நாயக்கர், தேர்கள் முழுதும் திருவிளையாடல் புராணம் இருக்கற மாதிரி 2 பெரிய தேர்கள் செய்யறாரு. மாசி வீதி பெரியது. அதுல தேரோட்டம் நடக்கற மாதிரி தேர் செஞ்சாச்சு.மாசி மாதம் திருக்கல்யாணம் நடக்கும்.அதோட சேர்த்து திக் விஜயம், செங்கோல் வாங்கறது எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. தண்டோரா வெச்சு பக்கத்து கிராம ஊர்களில் எல்லாம் மக்களை அழைத்து மாசி மாசம் தேர் இழுக்க ஏற்பாடு செஞ்சா, தேர் வடம் பிடிக்க குறைஞ்ச மக்களே வராங்க.மாசி மாசம் சில ஊர்கள்ல அறுவடை முடியலன்னு தெரிஞ்சு, தேர் திருவிழாவை சித்திரைக்கு மத்தினாரு நாயக்கர்..
அப்போவாவது மக்கள் வந்திருவாங்கன்னு பார்த்தா, பக்தர்கள் எல்லாம் தேனூர் போறாங்க. அங்க தான் நம்ப அழகர் சித்திரை உற்ஸவத்திற்கு போறாரு. ஆமாம், அந்த நாட்களில், அழகர் கோவிலிருந்து கிளம்பி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, கொண்டமாரி, பரவை, சமயநல்லூர் வழியா தேனூர் வைகைக்கரை மண்டபத்துல இருந்து சைத்திர உற்ஸவம் கண்டருள்வார். அதனால அந்த கிராமம் மக்கள் எல்லாரும் மதுரை வர முடியல. வேற வழி இல்லைன்னு நினைச்சு நாயக்கர் அழகரை மதுரைக்கு எழுந்தருளப்பண்ண வழி செய்யறாரு.. ஆனா பழைய வழில இருக்கற மக்கள் உடன்படணுமே.
அதுக்கும் நாயக்கர் கிட்ட ஒரு சொலுஷன் இருந்தது. மதுரை வைகை மையத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதை தேனூர் மக்களுக்குக் கொடுக்கணும். அதுல அழகர் எப்படி தேனூர்ல இருப்பாரோ அது போல இருக்கட்டும்.மற்ற கிராம மக்களுக்கு மதுரை வைகையை ஒட்டி அவங்க ஊர்கள்ல இருக்கற மாதிரி மண்டகப்படி/திருக்கண் அமைக்க இடம் தர, மக்களுக்கும் ஏக சந்தோஷம். நாயக்கரே சொன்ன அப்பறம் வேற என்ன..
இன்றும் அந்த வைகை மைய மண்டபம் உள்ளது, 21 தூண்களுடன், 10அடி உயரத்தில்..இன்றும் அந்த இடத்தின் பெயர் "ஆழ்வார் குளம் ".. ஆமாம் நாயக்கர் வைணவர். ஆனா அழகர் மட்டும் அங்க வரதில்ல.. மேலும் ஒரு நாயக்கரின் வருகைக்காக அந்த மண்டபம் காத்துக்கொண்டிருக்கிறது.ஆனா இன்னிக்கு வைகையில் ஒரு கொ ட்டகையில் அழகர் எழுந்தருளும் ம ண்டபத்தின் பெயர் ‘தேனூர்மண் டபம்’ என்றே ஸ்டிக்கர் ஒட்டப் படுகிறது. . அப்படித் தான் மீனாட்சியின் மாசி விழா சித்திரைக்கு மாற, அழகர் விழா மதுரைக்கு மாறி, அழகரும் மதுரைக்கு விஜயம் செய்யறாரு. சைவ-வைணவ ஒற்றுமை, தங்கைக்கு கல்யாணம் பாக்க வாராருன்னு சொல்லறது எல்லாம் ~250 வருசமா வந்திருக்கும்.எது எப்படியோ வஞ்சக் கள்வன் மதுரைக்கு வந்தா போதும்..
இப்போ தெரியுதா - மாசி வீதியில் சித்திரைத் தேர் விழா ஏன்னு..
அடுத்து - எதிர் சேவை, ஆண்டாள் மாலை, ஆயிரம் பொன் சப்பரம், சாதிகளின் பங்களிப்பு, மானாமதுரையில் அழகர்.. . தொடரும்.. --கிரி (04/22), தேர்-எதிர்சேவை நாள்
No comments:
Post a Comment